சுரங்க விஷயம் கேட்டதும்! ஆஸியிலிருந்து ஓடி வந்த அர்னால்டு! இந்தியர்களை காத்த தாடிக்காரர்! யார் இவர்?
டெல்லி: ஆஸ்திரேலியாவில் இருந்து அர்னால்டு டிக்ஸ் என்பவர் உத்தரகாண்ட் வந்து சுரங்க மீட்பு பணிகளில் ஈடுபட்டது பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி சில்க்கியாரா சுரங்கப் பாதை இடிபாடுகளில் சிக்கி 17 நாட்களாக 41 தொழிலாளர்கள் சிக்கி தவித்தனர். இங்கே சுரங்கம் அமைக்கும் பணியின் போது சுரங்கம் இடிந்து உள்ளே மூடியதால் அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
சார் தாம் திட்டத்தின் ஒரு பகுதியான இந்த சுரங்கப்பாதை, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சில்க்யாரா மற்றும் தண்டல்கான் இடையே உத்தர்காசி மற்றும் யமுனோத்ரியை இணைக்க உள்ள சாலையில் அமைந்துள்ளது. 4.5 கிமீ சுரங்கப்பாதை அமைக்கும் பணி பெரும்பாலும் முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள பணிகளை செய்யும் போதே சுரங்கம் இடிந்துள்ளது.
இவர்கள் தற்போது வெற்றிகரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். எலி சுரங்க தொழில்நுட்பம் உள்ளே மெல்லிசான சுரங்கம் தோண்டப்பட்ட அதன் வழியாக ஊழியர்கள் வெளியே அழைத்து வரப்பட்டு உள்ளனர்.

பறந்து வந்த நபர்: இந்த விஷயம் தெரிந்ததும் ஆஸ்திரேலியாவில் இருந்து அர்னால்டு டிக்ஸ் என்பவர் உத்தரகாண்ட் வந்தார். இவர் உலகம் முழுக்க சுரங்க தொழிலாளர் நலனுக்காக போராடும் நபர். சர்வதேச சுரங்க அமைப்பின் தலைவர் ஆவார். உலகம் முழுக்க எங்கே சுரங்க தொழிலாளர்கள் பிரச்சனையில் சிக்கினாலும் அந்த நாட்டிற்கு பறந்து வரும் நபர் இவர்தான்.
இவர் சுரங்கத்தில் ஊழியர்கள் சிக்கிய நிலையில் 11 நாட்களுக்கு முன் அங்கே வந்தார். அங்கேதான் இவர் 24 மணி நேரமும் இருந்தார். ஒரு நாள் கூட விடாமல் சப்பாத்தி சாப்பிட்டு .. கடும் குளிரில் இரவில் கூட மக்களுக்காக உடன் இருந்தார் . மிக மோசமான வானிலையில், பாத்ரூம், டாய்லெட் கூட இல்லாத சூழ்நிலையில் அங்கே சுரங்க ஊழியர்களை வழிநடத்தினார்,
( எலி வளை டெக்னிக்! பெரிய எந்திரங்கள் செய்ய முடியாததை செய்த மனித பலம்? சுரங்க ஊழியர்களை மீட்பது எப்படி )
பல ஆண்டுகளாக சுரங்க பணிகளை செய்த அனுபவம் கொண்ட இவர்.. அங்கே சுரங்கத்திற்கு உள்ளே எப்படி ஊழியர்களை மீட்பது என்பதில் தொடர் ஆலோசனைகளை செய்தார். அங்கே சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை அவர் தனது சொந்த மகன்களைப் போல நடத்தினார், அவர்களிடம் பேசி, அவர்களை சமாதானப்படுத்தினார். அவர்களுக்காக அப்பகுதி மக்களுடன் பிரார்த்தனை கூட செய்தார்.
அவர் இந்தியர் கிடையாது.. அவர் இந்த மக்களுக்கு தொடர்புடையவரும் கிடையாது.. அவர் இத்தனை இருந்தும் இந்த மக்களுக்காக களமிறங்கி பணிகளை செய்தார்.
மீட்பு பணிகள்: சார் தாம் திட்டத்தின் ஒரு பகுதியான இந்த சுரங்கப்பாதை, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சில்க்யாரா மற்றும் தண்டல்கான் இடையே உத்தர்காசி மற்றும் யமுனோத்ரியை இணைக்க உள்ள சாலையில் அமைந்துள்ளது. 4.5 கிமீ சுரங்கப்பாதை அமைக்கும் பணி பெரும்பாலும் முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள பணிகளை செய்யும் போதே சுரங்கம் இடிந்துள்ளது.

எலிவலை: எலி வலை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இவர்களை மீட்கும் முடிவை கையில் எடுத்தனர். சுரங்கம் தூண்டுவதில் பாதுகாப்பற்றதாக கருதப்பட்டு தடைசெய்யப்பட்ட சுரங்க நடைமுறையான "எலி வலை டெக்னிக்" உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை காக்க களமிறக்கப்பட்டது.
இறக்குமதி செய்யப்பட்ட உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள் பயன் அளிக்காத நிலையில்.. ஊழியர்கள் கையால் சுரங்கம் தோண்டி.. குழாய் அமைத்து.. குழாய் வழியாக ஊழியர்களை வெளியே கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications