டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீல முகமூடி.. சிவப்பு சட்டை.. கையில் கத்தியுடன் மிரட்டிய மாணவி.. யார் இவர்? அதிர வைக்கும் தகவல்கள்!

நேற்று ஜேஎன்யூவில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சில பெண்களும் சம்மந்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 06-01-2020 | Morning News | oneindia tamil

    டெல்லி: நேற்று ஜேஎன்யூவில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சில பெண்களும் சம்மந்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சில பெண்களும், உள்ளே புகுந்து கொடூர ஆயுதங்களை வைத்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    இந்தியாவில் மிக முக்கியமான கல்வி நிறுவனமாக பார்க்கப்படும், ஜேஎன்யூ தற்போது பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது . நேற்று மாலை டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள்.

    நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் இன்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து இந்த கொடூரத்தையே நிகழ்த்தினார்கள். இதில் மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களும் சரமாரியாக தாக்கப்பட்டனர்.

    2 ஞாயிற்றுக்கிழமைகள்.. 3 பல்கலைகளில் ரத்த வெள்ளம்.. அப்போது போலீஸ்.. இப்போது முகமூடி நபர்கள்! 2 ஞாயிற்றுக்கிழமைகள்.. 3 பல்கலைகளில் ரத்த வெள்ளம்.. அப்போது போலீஸ்.. இப்போது முகமூடி நபர்கள்!

    யார் தாக்குதல்

    யார் தாக்குதல்

    இந்த தாக்குதலை மாணவர்கள் மட்டும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு படிக்கும் சில மாணவிகளும் உள்ளே புகுந்து இப்படி கொடூரமாக தாக்கியுள்ளனர். இவர்கள் கையில் கொடூரமான ஆயுதங்களை வைத்துக் கொண்டு, மாணவர்களை தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

    கத்தி

    சில பெண்கள் கையில் கத்தியும் வைத்துக் கொண்டு மாணவர்களை தாக்கி உள்ளனர். அதிலும் புகைப்படத்தில் இருக்கும் இந்த பெண்தான் இணையம் முழுக்க வைரலாகி உள்ளார். இவர் சிவப்பு கட்டம் போட்ட சட்டை அணிந்திருக்கும் இந்த பெண், கையில் கத்தி வைத்துக்கொண்டு சக மாணவர்களை மிரட்டி உள்ளார்.

    ஆர்எஸ்எஸ் எப்படி

    இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஆதாரங்களும் வெளியாகி உள்ளது. இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கிறார் என்ற விவரங்கள் இணையத்தில் வெளியி்டப்பட்டு இருக்கிறது.

    பேஸ்புக் எப்படி

    இவர் பெயர் கோமல் சர்மா. இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஏபிவிபி உறுப்பினர் என்று குறிப்பிட்டு உள்ளார். அவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு, அங்கு எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இவரின் உடை மற்றும் முடி அமைப்பை வைத்து இதை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இதை இன்னும் போலீஸ் உறுதி செய்யவில்லை. இவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    English summary
    Who is the girl in the red shirt? Jawaharlal Nehru University attacker goes viral social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X