ஐபிஎல் கப்பை தட்டி தூக்கிய தோனி படை.. ஆனாலும் ரியல் வின்னர் என்னவோ அம்பானி தான்.. எப்படி தெரியுமா
டெல்லி: இந்தாண்டு ஐபிஎல் தொடர் ஒரு வழியாக நடந்து முடிந்துவிட்டது. நேற்றைய தினம் இறுதிப் போட்டி அட்டகாசமாக நடந்து முடிந்துவிட்டது. இந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லவில்லை என்றாலும் ரிலையன்ஸுக்கு தான் பெரிய வெற்றி என்பது உங்களுக்குத் தெரியுமா எப்படி எனப் பார்க்கலாம்.
16ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி முதலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்தது.

இருப்பினும், மழை தொடர்ந்து பெய்து வந்ததால் வேறு வழியின்றி போட்டி ரிசர்வ் நாளான திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. நேற்று மழை பெய்ய வாய்ப்புகள் குறைவு என்றே வானிலை மையம் கணித்திருந்தது.
ஐபிஎல் தொடர்:
அதன்படி திட்டமிட்டபடி 7.30 மணிக்குத் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தோனி மழை வெய்ய வாய்ப்பு உள்ளதால் பந்துவீச்சையே தேர்வு செய்தார். போட்டி ஒரு பக்கம் விறுவிறுப்பாகச் சென்றது.. கடைசி பந்தில் தான் சிஎஸ்வே அணி வெற்றி வாகையைச் சூடியது. இந்தப் போட்டியில் சென்னை வென்றாலும் உண்மையில் இந்த ஐபிஎல் தொடரின் ரியல் வின்னர் என்னவோ ஜியோ சினிமாஎஸ் என்றே சொல்ல வேண்டும்.
கடந்தாண்டு வரை ஐபிஎல் தொடர் வரை டிவி மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் ஸ்டார் நெட்வோர்க்கிடம் தான் இருந்தது. ஆனால், இந்த முறை டிவிக்கு தனியாகவும் டிஜிட்டலுக்கு தனியாகவும் ஏலம் விடப்பட்டது. அதில் பெருந்தொகை கொடுத்து டிஜிட்டல் ரைட்ஸை ரிலையன்ஸ் கைப்பற்றியது. ஏலத்தில் பெரிய தொகை இருந்ததால் சந்தாவும் அதிகமாக இருக்கும் என்றே சொல்லப்பட்டது.
இருப்பினும் இன்ப அதிர்ச்சி தரும் விதமாக இலவசமாக அனைவருமே ஜியா சினிமாஸில் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கலாம் என அறிவித்தது. இதில் தான் ஜியோவுக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. இது ஜியோவின் மார்கெட் ஷேரை பல மடங்கு அதிகரித்துள்ளது. இது குறித்து Bobble ஏஐ என்ற நிறுவனம் ஆய்வு செய்திருந்தது., அதில் இந்தாண்டு ஐபிஎல் பார்வையாளர்கள் எண்ணிக்கை கடந்தாண்டு ஹாட்ஸ்டாரில் இருந்த பார்வையாளர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடப்பட்டது.
பல மடங்கு உயர்வு:
2022 மற்றும் 2023இல் ஐபிஎல் தொடருக்கு முன்பு மற்றும் ஐபிஎல் தொடரின் சமயத்தில் என ஒப்பீடு செய்யப்பட்டிருந்தது. இந்தாண்டு ஐபிஎல் சமயத்தில் ஜியோ சினிமா மார்கெட்ஷேர் 4 மடங்கு அதிகரித்துள்ளது. ஐபிஎல் தொடருக்கு முன்பு அது 10%ஆக இருந்த நிலையில், இப்போது அது 40.26%ஆக அதிகரித்துள்ளது. அதன் மார்கெட் ஷேர் மிகக் குறைவாக இருந்த சமயத்தில் கத்தாரில் கடந்தாண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை அதற்கு கை கொடுத்தது. அப்போது தான் அது 9 சதவிகிதத்தை எட்டியிருந்தது.
இதைக் கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். கடந்தாண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பு அப்போது போட்டிகளை ஒளிபரப்பிய டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு 30.24ஆக இருந்தது. இது ஐபிஎல் சமயத்தில் 3% மட்டுமே அதிகரித்து 33.51ஆக உயர்ந்தது. அதாவது ஐபிஎல் தொடருக்கு முன்னரே பலரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை பயன்படுத்தி வந்ததையே இது காட்டுகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் உள்ள பிரபல நிகழ்ச்சிகள் மற்றும் படங்களே இதற்குக் காரணமாக இருந்தது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் ஜியோ சினிமாவை பொறுத்தவரை ஐஎபில் தொடருக்கு முன்பு வரை அதன் ஷேர் மிகக் குறைவாகவே இருந்துள்ளது. அங்கே பார்வையாளர்களைக் கவரும் வகையிலான படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் பெரியளவில் இல்லாததையே இது காட்டுகிறது. அதேபோல ஓபன் ரேட், சேஷன்கள், நேரம் ஆகியவற்றிலும் ஜியோவை காட்டிலும் ஐபிஎலுக்கு முன்பான காலகட்டத்தில் ஹாட்ஸ்டார் அதிகமாக இருந்துள்ளது.
ரியல் வின்னர்:
அதாவது, ஐபிஎல் மூலம் ஜியோ சினிமாவுக்கு மார்கெட் ஷேர் கிடைத்த போதிலும் அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு நன்கு வலுவான கன்டெண்டுகள் தேவைப்படுகிறது. இந்தப் பிரச்சினையையும் ஜியோ சினிமா அடையாளம் கண்டு கொண்டதாகவே தெரிகிறது. ஏற்கனவே, அவர்கள் டிஸ்னி வசம் இருந்த HBO படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை இந்தியாவில் ஒளிபரப்ப ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் கோப்பையை சென்னை வென்றாலும் கூட இந்த ஐபிஎல் தொடரின் ரியல் வின்னர் என்னவோ ஜியோவும் ரிலையன்ஸும் தான்.












Click it and Unblock the Notifications