தோசை மாவில்.. குட்டி குட்டியா "8 நெளியுதே" என்னது? மெட்ரோஸ் காபி ஹவுஸ் ஓட்டலிலா இப்படி? நம்ப முடியல
டெல்லி: இஷானி என்ற பெண்ணுக்கு, சோஷியல் மீடியாவில் பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.. என்ன காரணம்? யார் இவர்?
பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்லும்போதோ அல்லது பிற இடங்களுக்கு செல்லும்போது, ஓட்டல்களில் சாப்பிட நேரிடுகிறது.. அதேபோல, வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் எத்தனையோ பேச்சுலர்களுக்கு, ஓட்டல்கள்தான் பசியாற்றி வருகின்றன..

ஆனாலும், சில ஹோட்டல்களில் உணவு சுகாதாரம் சரியாக பேணப்படுவதில்லை.. இதுகுறித்த புகார்களையும் வாடிக்கையாளர்கள் அவ்வப்போது தெரிவித்து வரும்நிலையில், உணவுத்துறை அதிகாரிகளும் நேரடியாக சென்று சம்பந்தப்பட்ட ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்துகிறார்கள்..
வார்னிங்: சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுமானால், சம்பந்தப்பட்ட ஓட்டல்கள் மீது நடவடிக்கையோ அல்லது அபராதமோ விதிக்கிறார்கள்.. இனி இப்படி புகார் வரக்கூடாது என்று ஓட்டர் நிர்வாகத்தினரை கடுமையாக எச்சரித்துவிட்டும் செல்கிறார்கள். எனினும் பகீர் புகார்கள் கிளம்பி கொண்டுதான் இருக்கிறது. டெல்லியில்கூட இதோ ஒரு சம்பவம் நடந்துள்ளது.
தோசை: கானாட் பிளேஸ் பகுதியில் செயல்பட்டு வருகிறது பிரபலமான "மெட்ராஸ் காபி ஹவுஸ்" உணவகம்.. இந்த ஓட்டலுக்கு இஷானி என்ற பெண், தன்னுடைய தோழியுடன் சாப்பிட சென்றுள்ளார்.. 2 பேருமே தோசை ஆர்டர் செய்திருக்கிறார்கள்.
சிறிது நேரத்தில் தோசை வந்துள்ளது.. இருவருமே அதை சாப்பிட முற்படும்போதுதான், குட்டி குட்டியாய் ஏதோ கருப்பாக தோசையில் தென்பட்டது. உற்றுப்பார்த்தபோதுதான், 8 கரப்பான்பூச்சிகளும் ஒரே தோசையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே இதை தங்கள் செல்போனில் வீடியோ எடுக்க முயன்றனர். ஆனால், அதற்குள் ஓட்டல் ஊழியர்கள் இதை பார்த்துவிட்டார்கள்.
வீடியோ: டக்கென டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த தோசைகளை எடுத்து சென்றுவிட்டார்களாம். இதனால், முழு வீடியோவை இஷானியால் எடுக்க முடியவில்லையாம். மேலும், இதை வெளியே சொல்லக்கூடாது என்று அந்த ஓட்டல் நிர்வாகத்தினர், இஷானியை மிரட்டினார்களாம். பேரமும் பேசினார்களாம்.
ஆனால், எதற்கும் அசராத இஷானி, நேராக போலீசுக்கு போய்விட்டார்.. புகாரை அங்கு தந்ததுடன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடும் புகார்களை கொண்டு சென்றார். அதுமட்டுமல்லாமல், ஓட்டலில் நடந்த சம்பவம் அனைத்தையும், இன்ஸ்டாகிராமில் விரிவாக பதிவிட்டுவிட்டார்.
கிச்சன் நாற்றம்: அந்த பதில், "ஒரு புகழ்பெற்ற ஓட்டலில் எப்படி இவ்வளவு கவனக்குறைவாக இருக்க முடியும்? என்று எனக்கு தெரியவில்லை.. அந்த கிச்சனை என்னால் பார்க்கவே முடியல.. நாற்றம் அடித்தது.. கிச்சனுக்கு கூரையும் இல்லை. ஓட்டலின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கைக்கையை நான் விடமாட்டேன்... தோசையில் 8 கரப்பான் பூச்சிகள் இருந்தது.. ஆனால், ஓட்டல்கள்காரர்கள் என்னை மிரட்டுகிறார்கள்.. பிறகு சமாதானம் பேசுகிறார்கள்.
ஒரே தோசையில் 8 கரப்பான்களை, யாராவது ஒரு சைவ உணவாளர் சாப்பிட்டு காட்டுங்கள் என்று அவர்களிடம் நான் சவால் விடுதேன்.. இந்நேரம் அவர்கள் தங்கள் தவறை உணர்ந்திருப்பார்கள் என நம்புகிறேன்" என்று இஷானி பதிவிட்டிருக்கிறார்.
பாராட்டு + பரபரப்பு: இஷானியின் இந்த பதிவு வைரலானதையடுத்து, அந்த ஓட்டர் தரப்பினர் வேறு வழியின்றி பொதுவெளியிலேயே பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்கள்.. தங்கள் வருத்தத்தையும் தெரிவித்து கொண்டுள்ளார்கள்.. இஷானியின் இந்த பதிவுக்கு இணையவாசிகள் திரண்டு வந்து பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications