Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யார் இந்த அருந்ததி ராய்? உபா சட்டம் பாய்ந்தது ஏன்? நாடாளுமன்றத்தில் வெடிக்கப் போகும் பூகம்பம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எழுத்தாளர் அருந்ததி ராய் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பாக பேசிய பேச்சுக்காக உபா சட்டப்படி வழக்குத் தொடர அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடங்க உள்ள நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடரில் பூகம்பமாக வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது?

இந்தியாவில் உள்ள அதிரடியான எழுத்தாளர்களில் ஒருவர் அருந்ததி ராய். அவரது அதிரடியான கருத்துகளால் அதிகம் அறியப்பட்டவர். 'நான் மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கிறேன், ஆனால் எனக்குத் தெரியும். அவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் கொல்லப்படும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன் என்று' என்று பல ஆண்டுகள் முன்பு பேசியவர்.

Arundhati Roy

தொடர்ந்து இடதுசாரி இயக்கவாதிகளால் முன்னிறுத்தப்பட்டு வரும் அருந்ததி ராய் எழுதிய தி காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ் நாவல் பரவலாகப் பேசப்பட்டது. இது தமிழில் கூட சின்ன விசயங்களின் கடவுள் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

பலரும் அருந்ததி ராயைக் கேரளாவில் பிறந்த எழுத்தாளர் எனத் தவறாக நம்பிக் கொண்டுள்ளனர். அவர் பிறந்தது மேகாலயாவில் உள்ள ஷில்லாங். இவரது பெற்றோர் பெங்காலி மற்றும் மலையாளி ஆவர். இவருக்கு 1997இல் புக்கர் பரிசு கிடைத்தது. அப்போது முதல் சர்ச்சைகளின் கூடாரமாகத் திகழ்ந்து வருகிறார் இவர். அல்லது இவர் பேசும் விசயங்கள் சர்ச்சையில் சிக்கி வருகிறது என்றும் சொல்லலாம்.

கடந்த 14 ஆண்டுகள் முன்பாக இவர் பேசிய கருத்து ஒன்றுக்காக இப்போது இவர் மீது உபா சட்டம் பாய்ந்துள்ளது. அதற்கான வழக்குத் தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.

இந்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டால் ஜாமின் பெற முடியாது. கிட்டத்தட்ட 62 வயதில், இவர் வெளியில் வரமுடியாத அளவுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால், இவரது எழுத்து வாழ்க்கை மட்டுமல்ல; மொத்த வாழ்க்கையும் முடங்கிவிடும்.

விசாரணை முடியும் வரை பல ஆண்டுகள் கூட அவர் காவலில் வைக்கப்படலாம். அந்தளவுக்கு இந்தச் சட்டம் மிகக் கடுமையானது. இந்தச் செய்தி வெளியானது முதல் மோடி அரசு விமர்சகர்களின் வாயை அடைக்க இதைப் பயன்படுத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டு எழும்பியுள்ளது.

இளமைக் காலம் தொட்டே அருந்ததி ராய், ஆளும் அரசுகளை எதிர்ப்பதில் துணிச்சலுடனே இருந்து வருகிறார். ஒருமுறை, "காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்ததில்லை. அது ஒரு வரலாற்று உண்மை. இந்திய அரசும் கூட இதை ஏற்றுக்கொண்டது" என்று பேசி இருந்தார்.
அதாவது 2010 அக்டோபர் மாதம் டெல்லியில் ஒரு நாள் முழுவதும் நடந்த மாநாட்டில் இவர் இப்படிக் கூறினார். அப்போது காஷ்மீர் பிரச்சினை இந்திய அரசியலில் கொந்தளிப்புடன் இருந்தது. ஜம்மு- காஷ்மீர் முழுவதும் டஜன் கணக்கில் மரணங்கள் தொடர்கதையாகி இருந்தன.

ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்று உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் வெடித்து எழுந்திருந்தனர். இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் மீது உரிமைக் கொண்டாடிய காலம். அப்போது ராய் முன்வைத்த கருத்துகள் மேலும் புயலைக் கிளப்பியது.

டெல்லியில் அமைந்திருந்த ராயின் வீட்டிற்கு வெளியே அவருக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. ராய், காஷ்மீரைச் சேர்ந்த ஷேக் ஷோகத் ஹுசைன் மீதும் தேசத் துரோகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், இன்னொரு தரப்பு ராய் சர்ச்சைக்குப் பிறகு பேச்சு சுதந்திரத்திற்கான தனது உரிமையைப் பாதுகாத்தார் என்று வாதிட்டனர்.

அதைக் கேட்டு விட்டு அருந்ததி ராய் சொன்னார், " சிலர் பத்திரிகைகளில் நான் 'வெறுக்கத்தக்கப் பேச்சுகளை' பேசுவதாகவும், இந்தியாவை உடைக்க விரும்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மாறாக, நான் சொல்வது அன்பு சார்ந்தது. பெருமையிலிருந்து தோன்றுவது" என்று பதிலளித்தார்.

இவர் மீது முதலில் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் மே 2022 இல் பிரிட்டிஷ் ஆட்சிக்கால தேசத்துரோகச் சட்டத்தை நிறுத்தி வைத்தது. இப்போது மூன்றாவது முறையாக மோடி ஆட்சிக்கு மீண்டும் வந்ததும் வழக்குத் தொடர அனுமதி கிடைத்துள்ளது.

இது பற்றி எழுத்தாளர் அமிதவ் கோஷ் தனது எக்ஸ் தளத்தில், "அருந்ததி ராய் மீதான இந்த வேட்டை முற்றிலும் மனசாட்சியே இல்லாதது. அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். அவர் கருத்து கூற உரிமை உண்டு. பத்தாண்டுகளுக்கு முன்பு அவர் கூறியதற்காக அவர் மீது இப்போது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதற்குச் சர்வதேச அளவில் எதிர்ப்புகள் வர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Arundhati Roy

அருந்ததி ராய் மீது கடந்த அக்டோபரில் இந்த வழக்கை நீதிமன்றத்தில் தொடர டெல்லி அதிகாரிகள் ஒப்புதல் அளித்தபோது, ​​கனடா எழுத்தாளர் நவோமி க்ளீன் அவரது எக்ஸ் தளத்தில் மோடியை எச்சரித்திருந்தார். "மிகத் திறமையான விமர்சகரை மவுனமாக்க இந்த வழக்கைத் தொடர்வதன் மூலம் நீங்கள் எதைக் கட்டவிழ்த்துவிடுவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது" எனக் கூறியிருந்தார்.

யுஏபிஏ பிரிவு 45 (1)ன் கீழ் அருந்ததி ராய், ஷேக் ஷோகத் ஹுசைன் மீது வழக்குத் தொடர துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதியாகவில்லை. இருந்தாலும் இந்த விவகாரம் இப்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சில ஆண்டுகளாக அதிக சர்ச்சையில் அடிபடாமல் இருந்து வந்த ராய் பக்கம் புயல் காற்று வீசத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து 'அவர்கள் (பாஜக) திரும்ப (ஆட்சிக்கு) வந்துவிட்டார்கள் என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்' என்று எதிர்க்கட்சிகள் கருத்து கூறியுள்ளனர்.

ஆக, மோடி 3.0 மக்களவைக் கூட்டத்தொடர் ஆரம்பிக்கும்போது இந்த விவகாரம் எதிர்க்கட்சிகள் அனல் பறக்க விவாதிக்க உதவலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+