டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நெருங்கும் கிளைமேக்ஸ்.. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவா? சசி தரூரா?.. நாளை ரிசல்ட்

அகில இந்தியா காங்கிரஸ் தலைவர் யார் என்று நாளை தெரிந்து விடும்

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் நேற்றைய தினம் நடைபெற்ற நிலையில், இதில் 96 சதவீத வாக்குகள் பதிவாகின... தேர்தலின் முடிவுகள் நாளை வெளியிடப்படுவதால் எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன

கடந்த 2019 ஆகஸ்ட் 10-ல் காங்கிரஸின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி பதவியேற்றார்.. ஆனாலும் உடல்நலம் காரணமாக, ஒரு வருடத்துக்கு மட்டுமே அவர் பதவியில் நீடிப்பார், அதன்பிறகு தேர்தல் மூலம் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்டது.

அதற்கேற்றவாறு 3 வருடங்களாகவே தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படவில்லை... இதனால் அதிருப்திகள் வெடித்தன.. பூசல்கள் பெருகின.. பல மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து விலகினர்.. விலகும்போது, ராகுலை கடுமையாக குற்றஞ்சாட்டிவிட்டு போனார்கள்.

ஒருபக்கம் காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. மறுபக்கம் யாத்திரை! ராகுல் காந்தி வாக்கு எங்கு யாருக்கு? ஒருபக்கம் காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. மறுபக்கம் யாத்திரை! ராகுல் காந்தி வாக்கு எங்கு யாருக்கு?

 3 பேர் மறுப்பு

3 பேர் மறுப்பு

விரைவில் எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், காங்கிரஸ் விழித்து கொண்டுள்ளது.. சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது... ஆனாலும், தேர்தலில் போட்டியிட சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி 3 பேருமே மறுத்துவிட்டனர். கட்சி தலைவர் தேர்தலில் வேட்பு மனு தாக்கலில் பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திருவனந்தபுரம் எம்பி, சசி தரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டது.

 எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

அதன்படி, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்றைய தினம் நடைபெற்றது. அந்தந்த மாநிலங்களின் காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் காலை10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 9,900 நிர்வாகிகள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9,500 பேர் நேற்று வாக்கினை செலுத்தினர். இது 96 சதவீத வாக்குப் பதிவு ஆகும்... தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

 ராகுல் காந்தி

ராகுல் காந்தி

வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கேபெங்களூருவில் தனது வாக்கினை செலுத்தினார். அவரை எதிர்த்துப்போட்டியிடும் சசி தரூர் திருவனந்தபுரத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்... இந்திய ஒற்றுமை பாத‌யாத்திரையில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள சங்கனகல்லு என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தன்னுடைய வாக்கை செலுத்தினார்... அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் 40 பேர் அங்கு வாக்கு செலுத்தினர்.

 போனில் வாழ்த்து

போனில் வாழ்த்து

இதை பற்றி மல்லிகார்ஜுன கார்கே சொல்லும்போது, இது உட்கட்சி தேர்தல்நட்புரீதியாக போட்டியிடுகிறோம். சசி தரூர் என்னை போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். நானும் அவருக்கு வாழ்த்துகூறினேன் என்றார்.. அதேபோல, சசிதரூர் சொல்லும்போது, காங்கிரஸின் தலையெழுத்தை தொண்டர்கள் முடிவு செய்வார்கள். கட்சியில் மாற்றம் தொடங்கி உள்ளது. தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வேன் என்றார்..

 95 சதவீதம்

95 சதவீதம்

95 சதவீதம் தேர்தலை முடித்து விட்டு வெளியே வந்த தலைமை தேர்தல் அதிகாரி பிரதாப் பானு சர்மா செய்தியாளர்களிடம் சொல்லும்போது, தேர்தல் மிகவும் அமைதியாக நடந்து முடிந்தது... 711 வாக்காளர்களில் 662 பேர் வாக்களித்து இருந்தனர். இது 93 சதவீதம் ஆகும்... இது தவிர தமிழகத்தை சேர்ந்த 10 அல்லது 12 பேர் பெங்களூர் மற்றும் டெல்லியில் வாக்களித்து உள்ளனர். அதனை சேர்க்கும்போது வாக்களித்தவர்களின் சதவீதம் 95 ஆக உயரும். காங்கிரஸ் கட்சி மட்டுமே ஜனநாயக முறைப்படி அடி மட்டத்தில் இருந்து அகில இந்திய தலைவர் பதவி வரை தேர்தலை நடத்தி உள்ளது என்றார்.

 நாளை ரிசல்ட்

நாளை ரிசல்ட்

மாநில தலைமை அலுவலகங்களில் பதிவான வாக்குகள் அனைத்தும், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு இன்றைய தினம் கொண்டு செல்லப்பட உள்ளது.. அங்கு நாளை புதன்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.. வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக அனைத்து மாநிலங்களில் பதிவான வாக்குச் சீட்டுகளும் ஒன்றாக குவிக்கப்பட்டு, குலுக்கப்படும்.- இதன் மூலம் எந்த மாநிலத்தில் யாருக்கு அதிக வாக்குகள் கிடைத்தது என்பது தெரியவராது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Who will be the next Congress leader and All India Congress president election 95 percent voting in tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X