இந்தியா பாலைவனமாவதை தடுக்கும் ஆரவல்லி மலைகள்.. ஏன் முக்கியம்! திடீர் சர்ச்சைக்கு என்ன காரணம்
டெல்லி: ஆரவல்லி மலை தொடர்பாக மத்திய அரசின் விளக்கமும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் தான் கடந்த சில நாட்களாக இணையத்தில் விவாதமாக இருந்தது. உண்மையில் இந்த விவகாரத்தில் நடப்பது என்ன.. ஆரவல்லி மலை ஏன் இந்தியாவுக்கு ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
உலகின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றாக ஆரவல்லி மலைகள் அறியப்படுகிறது. சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் இது நாடு முழுக்க கவனத்தைப் பெற்றுள்ளது. 'ஆரவல்லி மலை' என்பதற்கான புதிய வரையறையை நீதிமன்றம் அங்கீகரித்ததே இதற்குக் காரணம். இந்தத் தீர்ப்பு வட இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலப் பயன்பாடு மீது தாக்கத்தை ஏற்படுத்தும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆரவல்லி மலை
இந்தியாவின் மற்ற மலை அமைப்புகளைப் போலல்லாமல் ஆரவல்லி மலைத் தொடர் தனித்துவமானது. சுமார் இரண்டு பில்லியன் ஆண்டுகள் பழமையான இது, இமயமலைகளை விடப் பழமையானது. டைனோசர்கள் மற்றும் பல உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பே புரோட்டரோசோயிக் காலத்தில் உருவானது. குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி முழுவதும் பரவியுள்ள இந்த மலைத்தொடர், மிகப் பெரிய பூகம்பங்கள், அரிப்பு மற்றும் காலநிலை மாற்றங்கள் என அனைத்தையும் தாங்கி நிலைத்து நிற்கிறது.
இதன் தாழ்வான மலைகள் மற்றும் பாறை முகடுகளுக்கு அதிக உயரம் இல்லாவிட்டாலும், அது பல்வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், அதன் வயதும் ஆய்வாளர்களை அதை நோக்கி ஈர்க்கிறது. இந்த ஆரவல்லி மலைக்கு மத்திய அரசு கொடுத்த விளக்கமே இப்போது விவாதமாகியுள்ளது.
விளக்கம்
ஆரவல்லி மலை தொடர்பாக மத்திய அமைச்சகம் அமைத்த குழு உச்ச நீதிமன்றத்தில் ஒரு விளக்கத்தை முன்வைத்திருந்தது. அதாவது சுற்றியுள்ள நிலப்பரப்பிலிருந்து குறைந்தது 100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைகளை மட்டுமே 'ஆரவல்லி மலை' என அங்கீகரிக்க முடியும். மேலும், 500 மீட்டருக்குள் அமைந்திருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மலைகளை மட்டுமே 'ஆரவல்லி மலைத்தொடர்' என அழைக்க முடியும் என்றனர். இந்த விளக்கத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டது.
இருப்பினும், ஆரவல்லி மலை இயல்பாகவே உயரம் குறைவானது. எனவே, உயரத்தின் அடிப்படையில் அதை வரையறை செய்வது தவறானது எனப் பலரும் கண்டிக்கிறார்கள். இதனால் ஆரவல்லி அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் உயரம் குறைவாக உள்ள பல பாறை முகடுகளையும், சிறு குன்றுகளையும் பாதுகாக்க முடியாமல் போய்விடும் என விமர்சகர்கள் கூறுகின்றனர். சுரங்கம், ரியல் எஸ்டேட் காரணமாக அப்பகுதியில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என வல்லுநர்கள் அஞ்சுகிறார்கள்.
போராட்டம்
இதன் காரணமாகவே ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி-என்சிஆர் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. Save Aravalli பதாகைகளுடன் போராட்டங்கள் நடந்து வருகிறது. பழமையான ஆரவல்லி மலைகள் இப்படிக் குறுகிய முறையில் வரையறுப்பது, சட்டவிரோதச் சுரங்கம் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு வழிவகுக்கும் என சாடுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் பலரும் இது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து ஆரவல்லி குறித்து மத்திய அரசு விளக்கமளித்தது. அதாவது ஆரவல்லி மலை 90% சதவீதத்திற்கு மேல் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அதில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என விளக்கமளித்துள்ளது.
ஏன் முக்கியம்
உயரம் குறைவாக இருந்தாலும் ஆரவல்லி மலைத் தொடர் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியமானதாக உள்ளன. தார் பாலைவனம் கிழக்குப் பக்கமாகப் பரவுவதைத் தடுக்கும் ஒரு இயற்கை அரணாக இவை செயல்படுகின்றன. அத்துடன், அப்பகுதியின் காற்றுப் போக்கை ஒழுங்குபடுத்துவதோடு, தூசும் மணலும் இந்தோ-கங்கை சமவெளிகளுக்குள் நுழைவதையும் இவை குறைக்கின்றன. அதாவது இந்த மலைத்தொடர் இல்லை என்றால் தார் பாலைவனம் கிழக்கு நோக்கி மேலும் பரவி இருக்கும். வட இந்தியாவின் மேலும் பல பகுதிகள் பாலைவனமாகி இருக்கும்.
மேலும், மழைப்பொழிவு சீராக வைத்திருப்பதிலும் இந்த மலைகள் பெரும் பங்காற்றுகின்றன. பல்வேறு வனவிலங்குகளுக்கும் இருப்பிடமாக உள்ளன. காடுகள் சுருங்கி, நகரங்கள் விரிவடைந்து வரும் இன்றைய சூழலில், இந்த மலைத்தொடர் மேலும் இன்றியமையாததாகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications