வசமாய் சிக்கிய கெஜ்ரிவால்.. டெல்லி மதுபான ஊழல் வழக்கில் சிபிஐ சம்மன் அனுப்பியது ஏன்? ஷாக் பின்னணி
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஆம்ஆத்மி கட்சி குற்றம்சாட்டும் நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதன் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்த அரவிந்த் கெஜ்ரிவால் திடீரென்று ஆம்ஆத்மி எனும் அரசியல் கட்சியை தொடங்கி டெல்லியில் ஆட்சியை கைப்பற்றினார். தற்போது டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது.
ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு அரசியலில் குதித்த அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆட்சியையும் டெல்லி மதுபான ஊழல் வழக்கு ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது.
சிபிஐ விசாரணை: அதாவது டெல்லியில் கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் ஊழல், முறைகேடு புகார் எழுந்த நிலையில் அது கைவிடப்பட்டது. இருப்பினும் மதுபான கொள்கை ஊழல் குறித்து ஆளுநர் விகே சக்சேனாவுக்கு புகார்கள் சென்ற நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்பட பலரது வீடுகளில் சோதனை செய்தனர்.
கைது நடவடிக்கை: இதில் ஆம்ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பு பிரிவை சேர்ந்த நிர்வாகி விஜய் நாயர், 9 தொழிலதிபர்கள், 2 மதுபான ஆலை மீது சிபிஐ சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விஜய் நாயர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும் டெல்லி மதுபான ஊழல் வழக்கில் தெலங்கானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும்‛‛சவுத் குரூப்'' என்ற தொழிலதிபர்கள் குழுவுக்கு தொடர்பு இருப்பதும், ரூ.100 கோடி வரை சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறையும் விசாரணையில் குதித்தது.

மணிஷ் சிசோடியா கைது: சவுத் குரூப் தொழிலதிபர்கள் விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகளும் எம்எல்சியுமான கவிதா உள்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சிபிஐ மணிஷ் சிசோடியாவை கைது செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி 9 மணிநேர விசாரணைக்கு பிறகு மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தனது பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளார்.
கெஜ்ரிவாலுக்கு சம்மன்: இதற்கிடையே தான் ஆம்ஆத்மி கட்சி டெல்லி மதுபான ஊழலை மறுத்துள்ளார். . அரசியல் உள்நோக்கத்தில் பாஜக மத்திய விசாரணை அமைப்பு மூலம் ஆம்ஆத்மி கட்சியை முடக்க நினைக்கிறது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்தனர். இந்நிலையில் தான் மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏப்ரல் 16(நாளை) நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
பின்னணி என்ன: தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், பாஜக திட்டமிட்டு சம்மன் அனுப்பி இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. இருப்பினும், சிபிஐ முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர் ஆவார் என்றும் அக்கட்சி கூறியுள்ளது. இந்நிலையில் தான் டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதன் பின்னணியில் உள்ள விபரம் வெளியாகி உள்ளது.
பேஸ்டைமில் பேச்சு: அதாவது டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக சமீபத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில் மதுபான தொழிலதிபரும், டெல்லி மதுபான ஊழலில் தொடர்பு கொண்டவராக அறியப்படும் சமீர் மகேந்திரனின் பெயர் இடம் பெற்றிருந்தது. இந்த சமீர் மகேந்திரனுடன், அரவிந்த் கெஜ்ரிவால் பேஸ்டைமில் பேசியுள்ளார். அப்போது மதுபான கொள்கை விவகாரத்தில் ஆம்ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு பொறுப்பாளரான விஜய் நாயரை நம்பும்படி கேட்டு கொண்டுள்ளார்.
குற்றப்பத்திரிகை தகவல்: மேலும் கடந்த ஆண்டு நவம்பர் 12 மற்றும் நவம்பர் மாதம் 15ம் தேதிகளில் சமீர் மகேந்திரு அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க விஜய் நாயர் தான் ஏற்பாடு செய்து தந்ததாகவும், ஆனால் அது நடக்கவில்லை எனவும், இதையடுத்து இருவரும் பேஸ்டைம் மூலம் வீடியோ காலில் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். இது குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ஆஜர்: இதுதவிர மதுபான கொள்கை விவகாரத்தில் டெல்லியில் வைத்து ஆந்திராவின் எம்பி மகுண்டா ஸ்ரீனிவாசலு ரெட்டியை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்தது. இந்நிலையில் தான் அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. அதன்படி நாளை அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ முன்பு விசாரணைக்கு ஆஜராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications