Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரிய ட்விஸ்ட்.. "அப்படியே" புறக்கணித்த அண்ணாமலை.. எல்.முருகனிடம் நெருங்கி வந்த மோடி.. சிரித்த வானதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் நடந்த தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் மோடியுடன் எல் முருகன் மிகவும் நெருக்கமாக காணப்பட்டார்.

தமிழ்நாட்டில் அரசின் நிலைப்பாட்டின் படியும், பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களின் நிலைப்பாட்டின் படியும் தை 1ம் தேதிதான் தமிழ் புத்தாண்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Why did not Annamalai attend the L Murugan new year celebration in Delhi and What did PM Modi say?

அதே சமயம் சிலரால் சித்திரை 1ம் தேதியும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை 1ம் தேதியை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க சிலரால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அதேபோல் தமிழ்நாட்டில் சித்திரை முதல்நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இப்படிப்பட்ட நிலையில்தான் டெல்லியில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று பாஜக இணை அமைச்சர் எல் முருகன் மூலம் கொண்டாடப்பட்டது. எல் முருகனின் டெல்லி இல்லத்தில் இந்த மாபெரும் கொண்டாட்டம் நிகழ்ந்தது.

சிறிய அளவிலான கலை நிகழ்ச்சிகள், தமிழ்நாடு கலாச்சாரத்தை பறைசாற்றும் நிகழ்வுகள் இந்த கொண்டாட்டத்தில் நடந்தது. தமிழ்நாட்டை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கூட இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பாஜக எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல் பாஜகவின் ஏபி முருகானந்தம் போன்றவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை இந்த நிகழ்வை புறக்கணித்தார்.

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக டெல்லியில் இருந்த அண்ணாமலை, சரியாக இந்த நிகழ்வு நடக்கும் போது டெல்லியில் இல்லாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Why did not Annamalai attend the L Murugan new year celebration in Delhi and What did PM Modi say?

சமீபத்தில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வருகை புரிந்தார். இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலினுடன் மோடி நெருக்கமாக இருந்தார். இவர்கள் ஒன்றாக பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். 20 நிமிடம் தனியாக இவர்கள் சந்திப்பு கூட நடத்தினர்.

அதோடு எல் முருகனும் முதல்வர் ஸ்டாலினுடன் நெருக்கமாக காணப்பட்டார். இந்த நிகழ்வில் பாஜக சார்பாக அதிகம் கவனிக்கப்பட்டது எல் முருகன்தான். அவர்தான் விமான நிலையத்தில் இருந்தே பல்வேறு இடங்களில் முன்னிலை வகித்தார். பாஜக தலைவராக அண்ணாமலை எங்குமே காணப்படவில்லை.

கடந்த முறை தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி அண்ணாமலையை, தனது காரில் அழைத்து சென்றார். அப்படி இருக்க, இந்த முறையின் தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை சந்திக்கவோ, மோடியுடன் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளவோ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவில்லை. அவர் டெல்லிக்கு சென்றதால்தான் இந்த சந்திப்பு நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த பயணம் முழுக்க எல் முருகனுடன்தான் மோடி நெருக்கமாக இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது டெல்லியில் நடந்த புத்தாண்டு நிகழ்விலும் இவர்கள் மிகவும் நெருக்கமாக காணப்பட்டனர்.

முன்னதாக மோடி தமிழ்நாடு வந்த போதும் அண்ணாமலை புறக்கணிக்கப்பட்டார். அண்ணாமலையை டெல்லி பாஜக மேலிடமும், அமித்ஷாவும் டெல்லிக்கு வர சொல்லி இருக்கின்றனர். முக்கியமான விஷயங்களை பேச வேண்டும் என்று டெல்லிக்கு வர வைத்துள்ளனர். இதனால்தான் அவரால் மோடியை பார்க்க முடியவில்லை.

சமயம் பார்த்து அவர் டெல்லிக்கு சென்று இருக்கிறார். டெல்லிக்கு அண்ணாமலை செல்ல முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசிய அண்ணாமலை, பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.

அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.

கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன்.

கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றியை முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை.

தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம். அண்ணாமலையின் இந்த பேச்சை டெல்லி ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+