வீக்னஸ் அம்பலம் ஆகிவிட்டது.. இந்தியாவிடம் கிட்டத்தட்ட சரண்டர்.. பாகிஸ்தான் கெஞ்சியது ஏன் தெரியுமா?
சென்னை: இந்தியாவுடன் மேற்கொண்டு வந்த மோதல் போக்கை நிறுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. தாக்குதல்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த முடிவு கிட்டத்தட்ட சரண்டர் போன்ற நடவடிக்கை ஆகும். பாகிஸ்தானின் இந்த முடிவிற்கு பின் முக்கியமான காரணங்கள் உள்ளன.
பாகிஸ்தான் மீதான தாக்குதலை மாலை 5 மணி முதல் நிறுத்தியதாக இந்தியா அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற நேரடிப் பேச்சு வார்த்தையில் தாக்குதலை நிறுத்துவது என முடிவு என்று தகவல் வெளியிடப்பட்டு உள்ளது;.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்தது. அனைத்து விதமான தாக்குதல்களையும் நிறுத்தியதாக இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளன. இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மோதல்களை நிறுத்துவது குறித்து இன்று மதியம் உடன்பாடு ஏற்பட்டது. இரண்டு நாட்டு பேச்சுவார்த்தையின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதே சமயம், பயங்கரவாதத்திற்கு எதிரான சமரசமில்லா நடவடிக்கையில் இந்தியா ஒருபோதும் பின்வாங்காது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் முடிவிற்கு என்ன காரணம்?
பாகிஸ்தானின் இந்த முடிவு கிட்டத்தட்ட சரண்டர் போன்ற நடவடிக்கை ஆகும். பாகிஸ்தானின் இந்த முடிவிற்கு பின் முக்கியமான காரணங்கள் உள்ளன.
காரணம் 1 - பாகிஸ்தான் வான்வெளி வீக்னஸ்: பாகிஸ்தான் நாட்டின் லாகூர் தொடங்கி இஸ்லாமாபாத் வரை பல இடங்களை இந்தியா ஏவுகணை மூலம் தாக்கியது. உட்பகுதியில் உள்ள இடங்களை கூட எளிதாக இந்தியா தாக்கியது. இதன் மூலம் பாகிஸ்தானின் வீக்னஸ் வெட்ட வெளிச்சம் ஆனது. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு ஏர் ஸ்பேஸ் இருக்கும். அதாவது அந்த நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள வான்பகுதி.
இந்த பகுதிக்குள் எந்த ஒரு பொருள் நுழைந்தாலும் அது ரேடாரில் தெரியும். ரேடார் மூலம் இவை கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். உதாரணமாக இந்தியா உள்ளே பாகிஸ்தான் போர் விமானம் வந்தால் உடனடியாக இந்தியாவிற்கு தெரியும். இதை பார்த்து உடனே இந்தியா பதிலடியை தரலாம். ஆனால் பாகிஸ்தான் உள்ளே ஏற்கனவே இதற்கு முன் இந்தியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தி உள்ளது. விமானம் உள்ளே புகுந்து தாக்கி உள்ளது. ஆனால் அப்போதெல்லாம் பாகிஸ்தான் ரேடார் இதை கணிக்க தவறிவிட்டது.
ஏனென்றால் இந்திய ராணுவ போர் விமானம் மிக தாழ்வாக பறந்து கூட தாக்குதல்களை நடத்தியது. இந்த முறை இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். அங்கு தீவிரவாத முகாம்கள் மட்டும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வுகணைகள் உள்ளே சென்று தாக்கி உள்ளன. ஆனால் பாகிஸ்தானால் இதை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியே கண்டுபிடித்தாலும் அதை மறித்து தடுக்க முடியவில்லை. அதாவது இந்தியாவின் ஏவுகணைகளை மறித்து பாகிஸ்தானால் தாக்க முடியவில்லை. இது பாகிஸ்தானின் மிகப்பெரிய வீக்னஸ் ஆகும்.

காரணம் 2 - இந்தியா உள்ளே வர முடியவில்லை: பாகிஸ்தானால் இந்திய ஏவுகணைகளை ரேடாரில் காண முடியவில்லை. இல்லையென்றால் அப்படியே பார்த்தாலும் அதை தடுக்கும் திறன் இல்லை என்பது தெளிவாகி உள்ளது. ஆனால் பாகிஸ்தான் உள்ளே நாம் சென்றது போல பாகிஸ்தானால் இந்தியா உள்ளே வர முடியவில்லை.
ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்த முயன்றது. பாகிஸ்தானில் இருந்து வந்த 8 ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா தடுப்பு அமைப்புகள் முறியடித்தது. பாகிஸ்தானின் 8 ஏவுகணை அடுத்தடுத்து தடுக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமான தளத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. இதற்காக multi-layered air defence network முறை தடுப்பு நடவடிக்கை பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியா செய்ததை பாகிஸ்தான் செய்ய முடியவில்லை.
காரணம் 3 - பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை: பாகிஸ்தானே இதில் அடிவாங்கியதை ஒப்புக்கொண்டுவிட்டது. இந்திய ஏவுகணைகளால் மூன்று விமானப்படை தளங்கள் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்து உள்ளது. 3 விமானப்படை தளங்கள் இந்திய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
நூர் கான் தளம், முரித் தளம் மற்றும் ஷோர்கோட் தளம் ஆகியவை தாக்கப்பட்டது என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரீப் சவுத்ரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
இந்திய ராணுவத்தால் தகர்க்கப்பட்ட விமானப்படை தளங்கள் பின்வருமாறு,
1.. நூர் கான் விமான தளம், ராவல்பிண்டி
2. PAF ரஃபிகி விமான தளம், ஷோர்கோட்
3. PAF முரிட் விமான தளம், சக்வால்
இந்த தாக்குதல் மூலம் பாகிஸ்தானின் அடிமடியில் இந்தியா கைவைத்துள்ளது என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் இந்த தளங்கள் அனைத்தும் பாகிஸ்தானின் முதுகெலும்பாக கருதப்படும் ராணுவ அமைப்புகள் ஆகும்.
காரணம் 4 - இந்தியா தாக்கப்படவில்லை: சமூக வலைதளங்களில், பாகிஸ்தானின் தவறான பொய் பிரசாரங்களை இந்தியா தவுடு பொடியாக்கியுள்ளது. அதிவேக ஏவுகணைகளை பாகிஸ்தான் பயன்படுத்தியது. பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியா முறியடித்து பதிலடி கொடுத்துள்ளது, பஞ்சாப் விமானப்படை தளத்தை குறிவைத்து, பாகிஸ்தான் இன்று அதிகாலை 1:40 மணிக்கு அதிவேக ஏவுகணைகளை அனுப்பியது.
மருத்துவமனைகள், பள்ளிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன, பாகிஸ்தானின் இந்த தாக்குதல் முயற்சிகள் தவிடுபொடியாக்கப்பட்டது.. இந்தியாவின் ஆயுதக் கிடங்குகளை பாகிஸ்தான் தாக்க முயன்றது. ஸ்ரீநகர் முதல் சாலியா வரை 26 இடங்களை பாக். குறி வைத்தது. ஆதன்பூர், பதான்கோட் ராணுவ தளங்களுக்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. பிரமோஸ் ஏவுகணை தளத்திற்கு எந்த சேதமும் இல்லை. பஞ்சாப் விமானப்படை தளத்தை குறிவைத்து அதிகாலை 1.40 மணி அளவில் அதிவேக ஏவுகணைகளை அனுப்பியது பாகிஸ்தான். துல்லியமாக தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளை பயன்படுத்தி இதை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.என்று இந்திய ராணுவம் சார்பாக ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி பேட்டி அளித்துள்ளார். மொத்தத்தில் பாகிஸ்தான் உள்ளே நாம் தாக்கியது போல அவர்களால் இந்தியா உள்ளே தாக்க முடியவில்லை.
காரணம் 5- பாகிஸ்தானின் பெரிய ஏவுகணை கூட தோற்றுவிட்டது : பாகிஸ்தானின் பிரைட்.. அதாவது பாகிஸ்தானின் பெருமை என்று அழைக்கப்பட்ட மிக முக்கியமான ஃபத்தா-1 ஏவுகணையை இந்தியா அடித்து காலி செய்துள்ளது. முக்கிய இலக்கை நோக்கிச் சென்ற ஃபத்தா-1 ஏவுகணை தடுத்து அழிக்கப்பட்டது. மேற்குப் பகுதியில் இந்திய வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து அழிக்கப்பட்டது.
இந்த சம்பவம் எங்கே நடந்தது என்பது பற்றிய விவரங்கள் ராணுவ பாதுகாப்பு கருதி வெளியிடப்படவில்லை. மேற்குப் பகுதியில் முக்கிய இலக்கை நோக்கிச் சென்ற ஃபத்தா-1 ஏவுகணை அழிக்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து வரும் ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா, Akash Missile System உள்ளிட்ட தடுப்பு அமைப்புகள் முறியடித்தது. இது பாகிஸ்தானுக்கு பெரிய அடி. இப்படி மோதலில் பாகிஸ்தானின் பெரிய ஏவுகணை கூட தோற்றுவிட்டது என்பதால் பாகிஸ்தான் கிட்டத்தட்ட இந்தியாவிடம் சரண்டர் ஆகிவிட்டது என்றுதான் கூற வேண்டும் .












Click it and Unblock the Notifications