ஒரே செகண்ட்.. செங்கோட்டை நுழைவாயிலில் திகைத்து நின்ற மோடி.. என்னாச்சு.. டக்கென திரும்பிய டெல்லி
டெல்லி: கொடியேற்றுவதற்காக கம்பீரமாக நடந்து வந்துகொண்டிருந்த பிரதமர் மோடி, செங்கோட்டை நுழைவாயிலில் ஒரு செகண்ட் அப்படியே நின்றுவிட்டார்.. என்ன காரணம்?
ஆங்கிலேயர்களிடம் வசப்பட்டு இருந்த இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் பெற்றது..நாடு சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் ஆகும் நிலையில் இன்று சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Recommended Video
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி, முன்னதாகவே அழைப்பு விடுத்திருந்தார்.
பிரதமர் மோடி தலைப்பாகையை கவனித்தீர்களா..! செங்கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலம்

நினைவிடம்
பிரதமரின் இந்த வேண்டுகோளை ஏற்று 13ம் தேதி முதல் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.. சுதந்திர தினத்தையொட்டி இன்று காலை மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு மரியாதை செலுத்தினார். பிறகு, அங்கிருந்து 7.14 மணிக்கு புறப்பட்ட மோடி, 7.18 மணிக்கு செங்கோட்டை வந்தடைந்தார். அங்கு, முப்படை வீரர்கள், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் பிரதமரை வரவேற்றனர்.

போலீசார்
இதை தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுகொண்டார். பின்னர், நாட்டின் பிரதமராக 9வது முறையாக செங்கோட்டையை தேசிய கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார்... சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்ற இவ்விழாவை முன்னிட்டு, செங்கோட்டையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

டர்பன்
மோடி உரையாற்றும்போது, ஜெய்ஹிந்த் என்று கைகளை உயர்த்தி உணர்ச்சி பொங்க கூறினார்.. இதைக் கேட்டு அங்கு கூடியிருந்த பொதுமக்களும், ஜெய்ஹிந்த் என்று முழக்கமிட்டனர்.. இதனால் கோட்டையே அதிர்ந்தது.. முன்னதாக, மூவர்ண கொடி நிறத்தில் தலையில் டர்பன் அணிந்து கம்பீரமாக செங்கோட்டையின் உள்ளே நுழைந்தார் பிரதமர் மோடி.. அதுமட்டுமல்ல, அங்கு பேண்டு வாத்தியங்கள் முழங்கிய கலைஞர்களின் அருகில் திடீரென சென்றார்.

சர்ப்ரைஸ்
அங்கு உட்கார்ந்திருந்த அனைத்து கலைஞர்களின், கைகளை குலுக்கி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.. இந்த சர்ப்ரைஸை அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. அதேபோல, செங்கோட்டையின் நுழைவாயிலை நோக்கி பிரதமர் கம்பீரமாக நடந்து வந்தார்.. அப்போது ஒரு யானை அங்கே நிறுத்தப்பட்டிருந்தது.. அது நிஜ யானை இல்லை.. ஆனால் உண்மையான யானை போலவே தத்ரூபமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது..

ஒரே செகண்ட்
வேகமாக நடந்து வந்து கொண்டிருந்த மோடி, அந்த யானையை பார்த்ததும், ஒரு செகண்ட் அப்படியே மலைத்து நின்றார்.. நடந்து வந்த தன்னுடைய வேகத்தை குறைத்து கொண்டு, அந்த யானையின் அருகில் சென்று உற்றுப்பார்த்து ரசித்தார்.. பிறகு மறுபடியும் அதே கம்பீரத்துடன் செங்கோட்டையின் உள்ளே நுழைந்தார்.. சுதந்திர தின கொண்டாட்டத்தை, ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்துடன் அதிர சிறப்பித்து வருகிறது செங்கோட்டை..!