இவ்வளவு நடந்த பிறகும் மாலத்தீவை இந்தியா கைவிடவில்லையே ஏன் தெரியுமா.. உண்மை காரணம் இதுதான்! பரபர

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா மாலத்தீவுக்கு இடையே மோதல் நிலவினாலும் கூட அந்நாட்டிற்கு இந்தியா தனது உதவிகளைத் தொடர்ந்து செய்தே வருகிறது. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.

இந்தியா மாலத்தீவு இடையேயான உறவு சமீப காலங்களாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள இந்திய ராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என்பதை மாலத்தீவு அதிபர் வலியுறுத்தி வருகிறார்.

Why India wont abandon Maldives anytime soon

இதற்கிடையே மாலத்தீவில் உள்ள மூன்று விமான தளங்களில் இருக்கும் இந்திய வீரர்களுக்குப் பதிலாகத் திறமையான சாதாரண பணியாளர்களை அங்கே பணியில் அமர்த்த இந்தியா முடிவு செய்துள்ளது. அதேநேரம் இந்தியாவின் முக்கிய நட்பு நாடாக மாலத்தீவு தொடர்ந்து இருக்கும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

மாலத்தீவு: கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வென்று முகமது முய்ஸு ஆட்சிக்கு வந்த நிலையில், அப்போது முதலே இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த முய்ஸு சீன ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நபராகவே அறியப்படுகிறார். மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவத்தை வெளியேற்றுவோம் என்ற முழக்கத்தை வைத்தே இவர் ஆட்சிக்கும் வந்தது குறிப்பிடத்தக்கது.

அதன்படி ஆட்சிக்கு வந்த உடன் இந்திய ராணுவம் மாலத்தீவில் இருந்து வெளியேற வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். இது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் மே 10ஆம் தேதிக்குள் இரண்டு கட்டங்களாக இந்தியா தனது ராணுவ வீரர்களை வாபஸ் பெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் முதல் குழு மார்ச் 10ஆம் தேதிக்கு முன்பும், மீதமுள்ளவர்கள் மே 10க்குள் மாலத்தீவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று முகமது முய்ஸு கூறியுள்ளார்.

இந்திய வீரர்கள்: அது சரி எதற்காக இந்திய வீரர்கள் மாலத்தீவில் இருக்கிறார்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரும்.. அதாவது தீவுகள் கூட்டமான மாலத்தீவில், ஒரு தீவில் யாருக்காவது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவும் வகையில் இந்தியா அவர்களுக்கு ஹெலிகாப்டர்களை வழங்கியது. அதைப் பராமரிக்கவும் ஆப்ரேட் செய்யவும் தான் இப்போது இந்திய ராணுவத்தினர் அங்கு உள்ளனர். சுமார் 90 இந்திய வீரர்கள் அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம் இந்தியா எப்போதும் மாலத்தீவுக்கு நட்பு நாடாக இருக்கும் என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். கடந்த 2023-24 நிதியாண்டில் மாலத்தீவுக்கு ரூ. 400 கோடியை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்திருந்த நிலையில், ஆனால் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் சுமார் ரூ. 770.90 கோடியை மாலத்தீவுக்கு இந்தியா ஒதுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா செய்யும் உதவி: அதேபோல இந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டிலும் கூட மாலத்தீவுக்கு இந்தியா ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைப் பொறுத்தவரை மாலத்தீவு ரொம்பவே முக்கியமான நாடாக இருக்கிறது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள மாலத்தீவுகள் புவிசார் அரசியலில் இந்தியாவின் முக்கிய அண்டை நாடாக இருக்கிறது.

இப்போதைய முய்ஸு அரசு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டு இருந்தாலும் கூட முந்தைய அதிபர் இந்தியா ஆதரவு நிலைப்பாட்டையே கொண்டிருந்தார். அந்தக் காலகட்டத்தில் பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பாகக் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடியும் அப்போதைய மாலத்தீவு அதிபர் சோலி இணைந்து கிரேட்டர் மாலே திட்டத்தைத் தொடங்கினர்.

என்ன காரணம்: மாலத்தீவு தலைநகரான மாலேவை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்பதே இந்தத் திட்டமாகும். மாலத்தீவு வரலாற்றில் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டமாக இது கருதப்படுகிறது. ஆனால், இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இதற்கும் சிக்கல் வருமோ என்ற அச்சம் இருக்கிறது. என்னதான் பல சிக்கல்கள் இருந்தாலும் புவிசார் அரசியலில் இந்தியாவுக்கு மாலத்தீவு முக்கிய நாடாக இருப்பதால், அந்நாட்டிற்குச் செய்யும் உதவிகளை இந்தியா தொடர்ந்து செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+