முதல் பாயிண்ட்தான் முக்கியம்.. நாடு முழுக்க போர் ஒத்திகை.. அப்போ கன்பார்ம்? மோடி மாஸ்டர்பிளான்
சென்னை: போர்ச் சூழலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாளை ஒத்திகை நடத்த, பல மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியது. விமான தாக்குதல் அபாயச் சங்கு ஒலிக்க விடுவது, தாக்குதல் நடந்தால் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்டவை ஒத்திகை பார்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு பின்வரும் கடிதத்தை மத்திய அரசு எழுதி உள்ளது.
போர் ஒத்திகை பயிற்சியின் முக்கிய விவரங்கள்
தேதி: மே 7, 2025
இடம்: உங்கள் மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் வகைப்படுத்தப்பட்ட அனைத்து சிவில் நகரங்கள்/மாவட்டங்கள்
ஒத்திகை பயிற்சியின் முதன்மை நோக்கங்கள் பின்வருமாறு:
விமானத் தாக்குதல் எச்சரிக்கை அமைப்புகளின் தாக்கத்தை மதிப்பிடுதல். அவர் எப்படி இருக்கின்றன, சரியாக இயங்குகிறதா? விமானங்கள் வருவதை முறையாக அறிவிக்கிறதா என்பதை மதிப்பிடுவது.
இந்திய விமானத்துடன் ஹாட்லைன்/ரேடியோ தொடர்பு இணைப்புகளை இயக்குதல். சோதனை செய்தல்.
படை கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் நிழல் கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாட்டைச் சோதிப்பது.

எதிரி தாக்குதல் ஏற்பட்டால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சிவில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பொதுமக்கள், மாணவர்கள் போன்றோருக்கு பயிற்சி அளித்தல்.
விபத்து தடுப்பு நடவடிக்கைகளை வழங்குதல்.
முக்கியமான ஆலைகள்/நிறுவல்களை முன்கூட்டியே மறைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தல்.
அவசர சேவைகள், தீயணைப்பு, மீட்பு நடவடிக்கைகள் மற்றும் கிடங்கு மேலாண்மை உள்ளிட்ட சிவில் பாதுகாப்பு சேவைகளின் செயல்பாடுகள் மற்றும் வேகத்தை கண்டுபிடித்தல் .
விபத்து தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தல்.
பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வேகமாக செல்ல வெளியேற்றத் திட்டங்களை வகுத்தல்.
முக்கியமான பாயிண்ட்:
இதில் முதல் பாயிண்ட் மிக முக்கியம். இந்தியா பாகிஸ்தான் இடையே போர் வரும் பட்சத்தில் விமான வழி தாக்குதல்கள் நடக்கும் அபாயம் உள்ளது. அப்படிப்பட்ட நேரங்களில் பாகிஸ்தான் விமானம் இந்தியா உள்ளே வரலாம். ஒருவேளை ரேடாரை கடந்து வரும் பட்சத்தில்.. அதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
இதற்காகவே விமானத் தாக்குதல் எச்சரிக்கை அமைப்புகளின் தாக்கத்தை மதிப்பிடுதல். அவர் எப்படி இருக்கின்றன, சரியாக இயங்குகிறதா? விமானங்கள் வருவதை முறையாக அறிவிக்கிறதா என்பதை மதிப்பிடுவது போன்ற சோதனைகள் நடத்தப்படுகின்றன.
பாகிஸ்தான் மீது விரைவில் இந்தியா போர் தொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக இதில்தான் Precision Strike முறையில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
1. Precision Strike முறையில் முதலில் ஒரு பகுதியில் உள்ள தாக்குதல் நடத்தப்பட வேண்டிய இடங்கள் உறுதி செய்யப்படும்.
2. அதாவது தீவிரவாத கேம்ப் மற்றும் ராணுவ கேம்ப் ஆகியவை மற்றும் குறிக்கப்படும்.
3. இப்படி குறிக்கப்பட்ட மையங்கள் அதன்பின் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும்.அவை சரியான இடங்களா என்று உறுதி செய்யப்படும்.
4. உளவு பணிகள் முடிந்த பின் தாக்குதல் திட்டங்கள் வரையறுக்கப்படும்.
5. எப்படி உள்ளே செல்வது எப்படி வெளியே வருவது.. என்ன மாதிரியான தாக்குதலை நடத்துவது என்று உறுதி செய்யப்படும்.
6. தேதி முடிவெடுக்கப்படாது.
7. விமான தாக்குதல் என்றால் எப்படி உள்ளே செல்வது.. தரைவழி தாக்குதல் என்றால் எப்படி நடத்துவது என்று திட்டம் வகுக்கப்பட்டு பிளான் செய்யப்படும்.
8. இது உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலை பெறும்.
9. கடைசியாக பிரதமர் ஒப்புதல் அளித்த பின் தாக்குதல் நடத்த முடிவு எடுக்கப்படும்.
10. தாக்குதல் நடத்தப்படுவது.. தாக்குதல் தினத்தின் 3-4 மணி நேரங்களுக்கு முன்புதான் வீரர்களுக்கே சொல்லப்படும். தாக்குதல்கள் கசிவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications