இந்தியாவுக்கு நெருக்கடி? இலங்கையை ஆக்கிரமிக்கும் அமெரிக்கா? ரணில் ஆலோசகராக நார்வே எரிக் சொல்ஹெய்ம்!
டெல்லி: இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவின் பருவநிலை ஆலோசகராக நார்வே முன்னாள் அமைச்சரும் இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் சமாதான தூதராக செயல்பட்டவருமான எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டிருப்பதும் 13 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் இலங்கை வருவதும் சர்வதேச அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பி கொண்டிருக்கிறது.
சர்வதேச அரசியலை கவனிப்பவர்கள் இந்த வரிகளை கடந்து செல்ல முடியாது.. அதாவது அமெரிக்காவின் மென்மை முகம் நார்வே; அமெரிக்காவின் கோர முகம் இஸ்ரேல் என்பதைத்தான். உலக நாடுகளில் நார்வே ஏதேனும் ஆய்வு அல்லது அமைதி முயற்சி அல்லது தலையீடு ஒன்றை மேற்கொண்டால் அதன் பின்னணியில் அமெரிக்கா இருக்கும்; உலக நாடுகளில் ஏதேனும் பேரழிவை ஏற்படுத்த அமெரிக்கா நினைத்தால் அங்கே இஸ்ரேல் முதன்மை பங்கு வகிக்கும் என்பதுதான் மேலே சொன்னதன் அர்த்தம்.

தெற்காசிய அரசியல்
தெற்காசிய அரசியல் மற்றும் இந்தோ பசிபிக் விவகாரங்களைப் பொறுத்தவரையில் இலங்கை மிக முக்கியமான இடத்தில் இருக்கிறது. மனிதர்கள் மேம்பாடு அடைந்த அரசுகள் என்ற கட்டமைப்பு உருவாகி யுத்தங்களும் நாடுபிடித்தல்களும் உச்சமடைந்த காலம் தொடங்கி இலங்கை இத்தகைய பிரதான இடம் வகித்து வருகிறது. அதனால்தான், இலங்கையின் திருகோணமலை அல்லது திரிகோணமலை யார் வசம் இருக்கிறதோ அவர்களே தெற்காசியாவை கட்டியாள முடியும் என்கிற அரசியல் சொல் உதயமானது.

அமெரிக்கா, இந்தியா
அமெரிக்காவை பொறுத்தவரை தெற்காசியா, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சித்து வருகிறது. ஆனால் இந்தியா எனும் மிகப் பெரும் நாடு இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆசையை அவ்வளவு எளிதாக நிறைவேற்ற விடாது. ஆகையால் ஆகக் கூடுமானவரை இந்தியாவை தன்வயப்படுத்தும் வகையில் பல்வேறு சர்வதேச கூட்டமைப்புகளை உருவாக்கி அதில் இந்தியாவையும் உறுப்பு நாடாக்கி கொள்கிறது. இருந்தபோதும் அரசியல் சூழல்கள் இந்தியாவையும் அமெரிக்காவையும் நெருக்கமான ஒரு தொடர் பயணத்துக்கு அனுமதிக்கவில்லை. இப்போது உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்த விவகாரத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் மோதிக் கொண்டு நிற்கின்றன. இதனால் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா விஷத்தை ஊட்டிக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தானும் அமெரிக்காவும்
தெற்காசியாவில் பாகிஸ்தானை மீண்டும் செல்லப்பிள்ளையாக்கி இந்தியாவை சீண்டிப் பார்க்கும் அமெரிக்கா இப்போது இலங்கையை நோக்கி காய்களை நகர்த்துகிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் சீனா, இந்தியா என்கிற இரு பெரும் தேசங்கள் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த இரு நாடுகளையும் மீறி அமெரிக்கா இப்போது கால் பதிக்க தொடங்கிவிட்டது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இதன் முதலாவது சமிக்ஞையாகத்தான் நார்வேயின் முன்னாள் அமைச்சரும் இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் சமாதான தூதராக இருந்தவருமான எரிக் சொல்ஹெய்ம், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவின் காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் நார்வே எரிக்சொல்ஹெய்ம்
ரணில் விக்கிரமசிங்கேவின் இந்த நியமனம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. அத்துடன் இல்லாமல் இலங்கைக்கு 13 ஆண்டுகளுக்குப் பின்னர் எரிக் சொல்ஹெய்ம் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதுவும் இலங்கை மிக மோசமான பொருளாதார பேரழிவில் அழிந்து கொண்டிருக்கும் தருணத்தில் எரிக் சொல்ஹெய்ம் இலங்கையில் களமிறக்கப்பட்டது எதற்காக? என்பதுதான் அரசியல் பார்வையாளர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது. அதே நேரத்தில் எரிக் சொல்ஹெய்ம் வருகை இந்தியாவுக்கு அப்படி ஒன்றும் சாதகமானதாக இருக்கப் போவது இல்லை; பாகிஸ்தானை வளைத்த அமெரிக்கா, இலங்கையையும் தன்வயமாக்கி இந்தியாவுக்கு நெருக்கடி தரவே அதிக சாத்தியங்கள் இருக்கின்றன எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications