காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்ய துடிக்கும் ராகுல்காந்தி.. பின்னணியில் மூத்த தலைவர்கள்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல் காந்தி பிடிவாதம் பிடிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ படுதோல்வியை சந்தித்தது. மோடிக்கு எதிராக எத்தனையோ பிரச்சாரங்களை முன் வைத்த நிலையிலும் தாம் இப்படி தோல்வி அடைந்து விட்டோம் என்ற அதிர்ச்சியில் இருந்து காங்கிரஸ் கட்சி இன்னமும் மீளவே இல்லை.
இந்த நிலையில் மேலும் அதிர்ச்சிக்குரிய வகையில் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். இதையடுத்து காங்கிரஸ் காரிய கமிட்டியில் மூத்த தலைவர்கள் சமாதானம் செய்தனர்.

பிடிவாதம்
அதையும் மீறி ராகுல்காந்தி பதவியை ராஜினாமா செய்யத்தான் போகிறேன் என பிடிவாதமாக இருக்கிறார். அவரை பிரியங்கா காந்தி, அகமது பட்டேல் உள்ளிட்டோர் சமாதானம் செய்து வருகின்றனர். எனினும் அவரது பிடிவாதத்திலிருந்து பின்வாங்கவில்லை.

வாரிசு
இந்த பிடிவாதத்திற்கு என்னதான் காரணம் என பார்த்தோமேயானால் அதில் சில உண்மைகள் புலப்படுகின்றன. பதவி விலக துடிக்கும் ராகுல்காந்தி ஒரே கோரிக்கை வாரிசுகளை தாண்டி காங்கிரஸுக்கு தலைமை அமைய வேண்டும் என்பதுதான்.

சீட்
இது எதனுடைய பாதிப்பு என்று பாதிப்பு என ஆராய்ந்தால் காரிய கமிட்டியில் பேசிய ராகுல், மூத்த தலைவர்களை கடுமையாக கடிந்து கொண்டார். அவர் பேசுகையில் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் தனது மகன்களுக்கு சீட் கேட்டு தொல்லை கொடுத்தனர். வேறு வழியில்லாமல் அவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டியதாயிற்று என கூறினார்.

வாரிசுகளின் ஆதிக்கம்
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்களாக இருந்தவர்களின் வரலாற்றை பார்த்தால் அதில் நேரு, அவரது மகள் இந்திரா, அவரது மகன் ராஜீவ் காந்தி, அவரது மனைவி சோனியா, அவரது மகன் ராகுல் என வாரிசு அரசியலே மேலோங்கி இருக்கிறது.

ராகுலின் நம்பிக்கை
இது போன்ற வாரிசு அரசியலுக்கு நாமே முன்னுதாரணமாக இருந்து வருவதால்தான் மூத்த தலைவர்கள் நம்மிடம் தைரியமாக உருட்டி, மிரட்டி தங்களது மகன்களுக்கு சீட் கேட்டு வாங்குகின்றனர். வாரிசு அரசியலில் இருந்து முதலில் நாம் விடுபட்டால் கட்சியிலும் இனி வாரிசுகளுக்கான தொல்லைகள் குறையும் என்பது ராகுலின் நம்பிக்கை. இதற்காகவே அவர் தலைமை பதவியிலிருந்து விடுபட பிடிவாதமாக இருக்கிறார் போல.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
"ஜோசியக்காரர் சொன்னாரே" விஜயின் கயிறும் ராகுலின் கேக்கும்! விடியல் பயணம் மட்டும் இல்லேனா? லியோனி நச் -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications