இந்த நடிப்ப பாருங்களேன்! சக்கரங்கள் உள்ள பெட்டியை ஏன் தலையில் தூக்க வேண்டும்? ராகுலை விளாசிய பாஜக
டெல்லி: டெல்லியில் ராகுல் காந்தி இன்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் அணியும் சட்டையை அணிந்து சூட்கேஸை தலையில் சுமந்து சென்றார். இதுதொடர்பான வீடியோ, போட்டோ இணையதளங்களில் வெளியான நிலையில் ‛சக்கரங்கள் உள்ள பெட்டியை ஏன் தலையில் தூக்கி செல்ல வேண்டும்? இது நடிப்பை தவிர வேறொன்றுமில்லை' என ராகுல் காந்தியை பாஜக சாடியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி சமீபகாலமாக பல்வேறு தரப்பு மக்களுடன் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் ராகுல் காந்தி இன்று டெல்லியில் சுமை தூக்கும் தொழிலாளிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் இந்த சந்திப்பு நடந்தது. சுமை தூக்கும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவர்களுக்கு தினசரி கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விஷயங்களை ராகுல் காந்தி கேட்டறிந்தார்.
இந்த வேளையில் சுமை தூக்கும் தொழிலாளிகள் அணியும் சிவப்பு நிற சட்டை மற்றும் கையில் கட்டும் பட்டையை ராகுல் காந்தி அணிந்தார். அதோடு ராகுல் காந்தி சூட்கேசை தலையில் வைத்து சுமந்து சென்றார். ராகுல் காந்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் அணியும் சிவப்பு நிற உடை அணிந்து சூட்கேஸை தலையில் வைத்து சுமந்து செல்லும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் தான் சுமை தூக்கிய ராகுல் காந்தியை தமிழக பாஜகவினர் துணை தலைவரான நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார். இது வெறும் பொய். நடிப்பு தான். சக்கரங்கள் உள்ள பெட்டியை ஏன் தலையில் தூக்கி செல்ல வேண்டும்? என கேள்வி கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛சக்கரங்கள் உள்ள பெட்டியை ஏன் தலையில் தூக்கி செல்ல வேண்டும்? சிந்தனையிலும், செயலிலும், பொய்மை நடிபை்ப தவிர வேறொன்றும் இல்லை. இரு எஸ்கலேட்டர்கள் ஆறு லிப்டுகள் உள்ள இந்த ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில். செய்வன திருந்த செய்'' என கடுமையாக சாடியுள்ளார்.
நாராயணன் திருப்பதியின் இந்த பதிவுக்கு, ஆதரவாகவும், எதிர்ப்பார்கவும் தற்போது கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சிலர் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் நிகழ்ந்த சம்பவங்களை போட்டோவா பதிவிட்டு ‛‛இது என்ன'' என நாராயணன் திருப்பதியிடம் கேள்விகள் கேட்டு வருகின்றனர்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications