பாகிஸ்தான் இருதயத்தில் அட்டாக்? ராவல்பிண்டி உள்ளே புகுந்து தாக்க இந்தியா திட்டம்? மேஜர் சொன்ன பிளான்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதி அசிம் முனீர் நேரடி தலையீட்டின் கீழ் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இந்திய ராணுவம் கடுமையான பதிலடியை தர திட்டமிட்டு வருகிறதாம்.

பஹல்காம் தாக்குதலுக்கு பின் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் .. இந்த தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் ராணுவத்தின் மறைமுக தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதி அசிம் முனீர் நேரடி தலையீட்டின் கீழ் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த தாக்குதல் தீவிரவாத தாக்குதல் போல இல்லை. பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹாசிம் மூஸா முன்னாள் பாரா கமாண்டோ.

பாக். ராணுவத்தின் சிறப்புப் பிரிவான எஸ்எஸ்ஜியை சேர்ந்தவர் இவர் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலும் அப்படித்தான் நடந்து உள்ளது. அதாவது தீவிரவாத தாக்குதல்கள் பெரும்பாலும் தற்கொலை தாக்குதல்கள். தீவிரவாதிகள் தங்கள் உயிரை பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஆனால் ராணுவ பயிற்சி தாக்குதல்களில் தாக்குதல் நடத்துபவர்கள்.. உயிருடன் திரும்பி வர திட்டம் வகுத்திருப்பார்கள்.

உள்ளே புகுந்து தாக்கிவிட்டு.. வெளியே உயிருடன் வர வேண்டும் என்பதே இவர்களுக்கு இருக்கும் டாஸ்க். அதை பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹாசிம் மூஸா மற்றும் டீம் செய்துள்ளது. ஹாசிம் மூஸாவை லஷ்கர் இ தொய்பா அமைப்பிற்கு பாக். ராணுவம் அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதன் மூலம்தான் பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதி அசிம் முனீர் நேரடி தலையீட்டின் கீழ் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முன்னாள் ராணுவ வீரர் மேஜர் மதன் குமார்

இது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் மேஜர் மதன் குமார் அண்ணாமலை வாரியர்ஸ் என்ற பக்கத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், இதன் சூத்திதாரி அசிம் முனீர். அவர் ராணுவ தளபதி. அவர் இருக்கும் இடம் ராவல்பிண்டி. அதாவது ராவல்பிண்டிதான் ராணுவ தலைமையகம் உள்ளது. இந்த ராவல்பிண்டிதான் இந்தியா தாக்க வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்கினால் வேலைக்கு ஆகாது. பாகிஸ்தான் பஞ்சாப்பில் தாக்க வேண்டும்.

சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் சிந்துவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்கினால் வேலைக்கு ஆகாது. பாகிஸ்தான் பஞ்சாப்பில் அடிக்காத வரை, ராவல்பிண்டியில் அடிக்காத வரை எதுவும் ஆகாது. அதற்கெல்லாம் நம்மிடம் பவர் இருக்கிறது. ராவல்பிண்டியில்தான் தாக்குதல் என்பது இருக்க வேண்டும். பிரம்மோஸ்க்கு பதிலடி தர அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை.. தடுப்பு அரண்கள் இல்லை என்பதை மறக்க வேண்டாம்.

Why should India go inside Pakistan this time Why they should go for Ralapindi

நம்மிடம் ஆப்ஷன் நிறைய உள்ளது. முப்படை தளபதிகள் காம்பாட் ரெடி மோடில் உள்ளனர். போருக்கு செல்லும் முந்தைய நிலை இது என்று மேஜர் மதன் குமார் கூறி உள்ளார்.

பாகிஸ்தான் மீது இந்தியா உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன என்று பாக். பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் பேசி உள்ளார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் மீது இந்தியா உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தான் படைகளை தயாராக இருக்க சொல்லி இருக்கிறேன். இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதால் எங்கள் படைகளை பலப்படுத்தியுள்ளோம்.

இது போன்ற சூழ்நிலையில் சில மூலோபாய முடிவுகளை எடுக்க வேண்டும், எனவே அந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியா நம் மீது தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாகிஸ்தான் ராணுவம் எங்கள் நாட்டு அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. இதை பற்றிய கூடுதல் விவரங்களை சொல்ல முடியாது. ஆனால் இந்திய ராணுவத்தின் தாக்குதல் / ஊடுருவல் உடனடியாக நடக்க வாய்ப்புகள் உள்ளன, என்று பாக். பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் பேசி உள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+