Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் சிக்கலில் யூடியூபர் மாரிதாஸ்.. வழக்கு தள்ளுபடிக்கு உச்சநீதிமன்றம் தடை.. பின்னணி இதுதான்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் முப்படை தலைமை தளபதி தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த நிலையில் அதுபற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித் யூடியூபர் மாரிதாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்தது. இதனை எதிர்த்து தமிழக போலீசார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில் மீண்டும் மாரிதாஸ் சிக்கலில் சிக்கி உள்ளார். உச்சநீதிமன்றம் ஏன் இப்படி உத்தரவிட்டது என்பது பற்றிய விபரம் தற்போது வெளியாகி உள்ளது.

இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக இருந்தவர் பிபின் ராவத். இவர் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். இவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 10க்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

இந்த துயர சம்பவம் கடந்த 2021 ம் ஆண்டு டிசம்பர் 8 ம் தேதி நடந்தது. இது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மாரிதாஸ் மீது வழக்கு

மாரிதாஸ் மீது வழக்கு

இதுபற்றி யூடிபர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், ‛‛தமிழ்நாடு திமுகவின் ஆட்சியில் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா? '' என கேள்வி கேட்டு சில விஷயங்களை குறிப்பிட்டு இருந்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. மேலும் தமிழகத்தின் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்டு அவதூறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் மீது மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர் கைது செய்யப்பட்டார்.

ரத்து செய்த உயர்நீதிமன்றம்

ரத்து செய்த உயர்நீதிமன்றம்

இதைடுத்து தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மாரிதாஸ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ட்விட்டரில் கேள்விக்குறியுடன் தனது கருத்தை மாரிதாஸ் பதிவிட்டுள்ளார். இது அரசை பாதிப்பதாக கருத முடியாது. அவர் மீது பதியப்பட்ட வழக்கு செல்லாது. இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டது. இந்த உத்தரவை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் வழங்கினார்.

மேல்முறையீடு

மேல்முறையீடு

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு போலீஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எம்ஆர் ஷா தலைமையிலான அமர்வில் கடந்த 9 ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக காவல் துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே ஆஜராகி வாதாடினர். அப்போது "வழக்கில் எதிர்மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை பதில் இல்லை. காவல் துறையின் புலன் விசாரணைக்கு உரிய கால அவகாசம் வழங்காமல் எதிர்மனுதாரர் மீது பதியப்பட்ட கிரிமினல் வழக்குகள் 4 நாட்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய மதுரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

 அவரசமாக ரத்து செய்யப்பட்ட வழக்கு

அவரசமாக ரத்து செய்யப்பட்ட வழக்கு

இந்நிலையில் உத்தரவின்போது உச்சநீதிமன்றம் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தது. இதுபற்றி உச்சநீதிமன்றம், ‛‛அவதூறு பரப்பியதாக 2021 டிசம்பர் மாதம் 9 ம் தேதி மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு அடுத்த நாளே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மாரிதாஸ் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவையும் உயர்நீதிமன்றம் அவசரஅவசரமாக டிசம்பர் 14ல் விசாரித்ததோடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

உரிய அவகாசம் வழங்க வேண்டும்

உரிய அவகாசம் வழங்க வேண்டும்

சட்ட நிலைப்பாடுப்படி பார்த்தால் தெளிவான விசாரணைக்காக விசாரணை அமைப்புக்கு உரிய நேரம் வழங்குவது அவசியமாகும். இதனை நியாயமாக வழங்க வேண்டும். மாரிதாஸ் மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பாக புலன் விசாரணை நடத்த விசாரணை அமைப்புக்கு (தமிழ்நாடு போலீஸ்) உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உரிய கால அவகாசம் கொடுக்கவில்லை என கருதுகிறோம். எனவே, வழக்கின் தன்மையை கருதி போலீசாரின் புலன் விசாரணை நடத்த ஏதுவாக மாரிதாஸ் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்யப்படுகிறது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+