Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"குற்றவாளிகளுக்கு உடந்தை.." பில்கிஸ் பானு வழக்கில் குஜராத் அரசுக்கு அதிகாரமே இல்லை.. உச்ச நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்த நிலையில், அப்போது உச்ச நீதிமன்றம் கூறிய சில கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு மிகப் பெரியளவில் வன்முறை கலவரம் ஏற்பட்டது. சில வாரங்கள் தொடர்ந்த இந்த கலவரத்தில் பல நூறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்தக் காலகட்டத்தில் பல மோசமான சம்பவங்களும் நடைபெற்றது.

 Why Supreme court said that the Gujarat government was not competent to release Bilkis Banos Rapists

அதில் பில்கிஸ் பானுவுக்கு நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குடும்பத்தில் இருந்த 3 வயதுக் குழந்தை உட்பட 14 பேர் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

பில்கிஸ் பானு வழக்கு: இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதில் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வழக்கு விசாரணை நடக்கும் போது சில காரணங்களால் விசாரணை குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கும் மாற்றப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நாட்டையே உலுக்கிய இந்த கொடூர குற்றத்தைச் செய்தவர்களைக் குஜராத் அரசு கடந்த 2022 ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுவித்தது. குற்றவாளிகளை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ள நிலையில், அதைப் பயன்படுத்தி குஜராத் அரசு இந்த குற்றவாளிகளை விடுவித்தது. இருப்பினும், இதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவருடன் மேலும் பலரும் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.

செல்லாது: இந்த மனுவை நீதிபதிகள் பி வி நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் விசாரித்த நிலையில், அவர்கள் இன்று தீர்ப்பு அளித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள், அவர்கள் மரியாதைக்குரியவர்கள் அவர்களின் மரியாதை முக்கியம் என்று தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கில் குற்றவாளிகளை முன் விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

என்ன காரணம்: குறிப்பாகக் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்யக் குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஏனென்றால் இந்த வழக்கு விசாரணை மகாராஷ்டிராவில் தான் நடைபெற்றது. எனவே, இந்த 11 பேரை விடுவிப்பது குறித்த முடிவை வழக்கு விசாரணை நடந்த மகாராஷ்டிர அரசே எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், நீதிபதி நாகரத்னா தனது தீர்ப்பில் சில விஷயங்கள் ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

நீதிபதி நாகரத்னா தனது தீர்ப்பில், "குஜராத் அரசு குற்றவாளிகளுக்கு உடந்தையாகச் செயல்பட்டது... இந்த பயம்தான் வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக் காரணமாக இருந்தது. குஜராத் அரசின் இந்த நடவடிக்கை அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கும் அதிகார துஷ்பிரயோகத்துக்கும் ஒரு உதாரணம். விதிகளை மீற நீதிமன்றத்தின் உத்தரவுகளையே பயன்படுத்தி குற்றவாளிகளுக்கு நிவாரணம் அளித்துள்ளன. செல்லாத உத்தரவின் மூலம் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

பழைய உத்தரவு: மேலும், கடந்த 2022இல் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி வழங்கிய தீர்ப்பு குறித்தே உச்ச நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைக் கூறியது. அப்போது நீதிபதி அஜய் ரஸ்தோகி தான், இந்த வழக்கில் குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலையாக மேல்முறையீடு செய்யலாம் என்று கூறியிருந்தார். அவரது இந்த தீர்ப்பை வைத்தே குற்றவாளிகள் மேல்முறையீடு செய்திருந்தனர்.

கடந்த 2022இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு என்பது மோசடியான முறையில், உண்மைகளை மறைத்துப் பெறப்பட்டதாகக் காட்டமான கருத்துகளை சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. "உண்மைகளை மறைத்து, தவறான கருத்துகளை உருவாக்கி குஜராத் அரசு குற்றவாளிகள் விடுதலையைப் பரிசீலிக்கும் உத்தரவு பெறப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விடுதலை குறித்து குஜராத் பரிசீலிக்கலாம் என உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இது ஒரு மோசடி செயல்" என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+