Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈழத் தமிழரை கைவிட்டதா தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள்? இலங்கை தேர்தல் குறித்து 'மவுனிக்கப்பட்டது' ஏன்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கை ஜனாதிபதி தேர்தல் களத்தில் சிங்களப் பேரினவாதி ஜேவிபி தலைவர் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றுள்ளார். இடதுசாரி பிளஸ் சிங்களப் பேரினவாதி என வினோத அடையாளம் கொண்ட அனுர குமார திசநாயக்கவை இலங்கை தேர்தல் களம் வெற்றி பெற வைத்துள்ளது. அதேநேரத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் வரலாறு காணாத கனத்த மவுனத்தை காட்டி இருப்பதும் கவனிக்கத்தக்கது.

இலங்கையின் பூர்வகுடிகளான தமிழர்களுக்காக பூமிப் பந்தில் முதல் குரல் எழுப்பக் கூடிய நிலமாக தமிழ்நாடுதான் இருந்து வந்தது. குறிப்பாக 1980களுக்குப் பிந்தைய ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்துக்கு உற்ற உறுதுணையாக இருந்தது தமிழ்நாடு. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்துக்காக உயிர் நீத்தவர்கள், முகம் அறியாமல் களத்தில் மாண்டு போனவர்கள் எண்ணற்றவர்கள் தமிழ்நாட்டில் உண்டு. இறுதி யுத்தத்தின் போது முத்துக்குமார் தீக்குளித்த சம்பவம் உலகத் தமிழரை உலுக்கி எடுத்தது.

sri lanka presidential election 2024 sri lanka election 2024

தமிழ்நாட்டு அரசியல் களம்: ஈழத் தமிழர் அரசியல் களம் என்றால் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்டவை வரிந்து கட்டி ஆதரவு தெரிவித்தன. ராஜீவ் கொலைக்கு முன்னும் பின்னும் பெரியார் இயக்கங்கள்தான் ஈழத் தமிழருக்கு உற்ற தோழமை இயக்கங்களாக இருந்தன. மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் பின்னாளில் ஈழத் தமிழர் ஆதரவு சக்திகளாக செயல்பட்டன. இந்திய இடதுசாரிகள் எப்போதும் ஈழத் தமிழர் பிரச்சனையில் விலகி நிற்பது அல்லது தமிழரின் பொதுக் கருத்தியலுக்கு முரணாக நிற்பதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர். தமிழ்நாட்டு இடதுசாரிகளுக்கும் இது பொருந்தும்.

சலசலப்பு இல்லாத தமிழ்நாடு: இப்படியான தமிழ்நாட்டில்தான் இலங்கையின் 9-வது ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எந்த ஒரு சலசலப்பு, பேசுபொருள் எதுவுமே இல்லை. இதற்கு இருவிதமான காரணங்கள் சொல்லப்படலாம். ஒன்று, 2009-ம் ஆண்டுக்குப் பிந்தைய ஈழத் தமிழர்கள் கைவிடப்பட்டவர்களாக; வலிமையான ஒரு தமிழ் தலைமை இல்லாதவர்களாக நிற்கின்றனர். ஈழத் தமிழ் அரசியல் சக்திகள் அத்தனையும் ஆளுக்கு ஒரு திசையில் முட்டி மோதி நிற்கின்றன. ஆகக் கூடுமானவரை சிங்கள நிராதரவானவர்களாக்கப்பட்டவர்களாக ப் பேரினவாத சக்திகளுடன் இணைந்தவர்களாக, நம்பகத்தன்மை அற்றவர்களாக இருக்கின்றனர் என சொல்லப்படலாம்.

திட்டமிட்ட மவுனிப்பு: இன்னொன்று 2009-ம் ஆண்டுக்குப் பின் தமிழ்நாட்டில் ஈழம் சார்ந்து, ஈழ விடுதலை சார்ந்து முழக்கங்களே வந்துவிடக் கூடாது என்கிற வகையிலான செயல் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது. அதாவது ஈழ ஆதரவு சக்திகளை திட்டமிட்டே ஈழ ஆதரவு களத்தில் இர்நுது துரத்தியடிக்கும் வகையிலான சீண்டல்கள், உரிமை கோரல்கள், இழி விமர்சனங்கள் என அத்தனையும் ஒரு செயல் திட்டத்தின் கீழ் முழு மூச்சாக இப்போதும் கட்டவிழ்த்துவிடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இத்தகைய செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சக்திகளுக்கு முழுமையான சுதந்திரத்தை டெல்லி 'கட்டளை'மேலிடம் வழங்கி இருக்கிறது. இந்த அவதூறு எரிமலைகளை எதிர்கொள்ள முடியாமல் காலம் காலமாக ஈழத் தமிழர் மீது அனுதாபம் கொண்டிருந்த பெருவாரியான அரசியல் சக்திகள் வேறுவழியே இல்லாமல் எதிர்நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்; இதனால் ஈழத் தமிழர் என்றாலே ஒரு குறிப்பிட்ட சக்திகளை மையமாகக் கொண்டதாக அர்த்தப்படுகிறது. இத்தகைய பின்னணியாலும் இலங்கை ஜனாதிபதி தேர்தல் குறித்து நீண்டகால ஈழ ஆதரவு அரசியல் சக்திகள் கனத்த மவுனமாக வேண்டிய நிலைமை உருவானது. அதாவது தமிழ்நாட்டின் ஈழ ஆதரவு சக்திகளின் குரல், திட்டமிட்டே 'மவுனிக்க வைக்கப்பட்டுள்ளது' என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+