Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்றால் என்ன! அனைவரும் ஒரே குரலில் ஆதரிப்பது ஏன்! இதில் உள்ள சிக்கல் என்ன

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 27 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் 33 இட ஒதுக்கீட்டிற்கு மத்திய அமைச்சரவை இப்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ஏன் முக்கியம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்புக் கூட்டத்தொடர், முக்கிய மசோதாக்கள் நிறைவேற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே திங்கள் மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்த அமைச்சரைக் கூட்டம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், இதில் சுமார் 27 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Why Womens Reservation Bill cant passed for 27 years explainer

மகளிர்: நமது லோக்சபாவில் இப்போது 15% குறைவான பெண் எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். பல மாநிலச் சட்டசபைகளில் நிலைமை இதை விட மோசம். அங்கெல்லாம் 10%க்கும் குறைவான பெண்களே சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இதுவே பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் தீர்மானம் தேவை என்பதை வலியுறுத்துகிறது.

பாலின சமத்துவத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் இந்த மசோதா கடந்த 27 ஆண்டுகளாகவே நிலுவையில் இருந்து வந்தது. கடைசியாகக் கடந்த 2010ஆம் ஆண்டில் யுபிஐ ஆட்சியில் இந்த மசோதா ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்டது. அதேநேரம் இந்த மசோதாவுக்கு சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது லோக்சபாவில் வாக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே போனது.

காலாவதியானது: அந்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்படாமல் போனதால் அது காலாவதியானது. பாஜக காங்கிரஸ் என இரு கட்சிகளுமே இந்த மசோதாவை எப்போதும் ஆதரித்தே வருகிறது. இருப்பினும், மற்ற சில கட்சிகள் அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்கள் ஒதுக்கீட்டுடன் சேர்ந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடும் தேவை என வலியுறுத்தினர்.

கடந்த சில நாட்களாகவே இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. இருப்பினும், அரசு தரப்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை. பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முடிவு எடுக்கப்படும் என்று மட்டும் மத்திய அரசு கூறியது. இந்தச் சூழலில் தான் இப்போது அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் குறைவு: இப்போது பார்த்தால் லோக்சபாவில் 78 பெண் எம்பிக்கள் உள்ளனர். இது மொத்தம் இருக்கும் 543 எம்பிக்களில் 15 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. அதேபோல ராஜ்யசபாவிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் 14 சதவீதமாக உள்ளது. நாடாளுமன்றத்தில் மட்டும் இந்த நிலை இல்லை.. இங்குள்ள பல சட்டமன்றங்களிலும் இதே நிலை தான்.

ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், அசாம், கோவா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, ஒடிசா, சிக்கிம், தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 10% குறைவாகவே பெண்கள் சட்டசபையில் உள்ளனர். பீகார், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரகாண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லியில் இந்த எண்ணிக்கை 10-12 சதவீதமாக இருக்கிறது.

மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் இது முறையே 13.7 சதவீதம் 12.35 சதவீதமாக இருக்கிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் 14.44 சதவீத பெண்கள் சட்டசபை உறுப்பினர்களாக உள்ளனர்.

மீண்டும் எழுந்த கோரிக்கை: இந்தச் சூழலில் தான் கடந்த சில காலமாகவே இது மீண்டும் பேசுபொருளானது. மத்திய அரசை இதை நிறைவேற்ற வேண்டும் என்று பிஜேடி மற்றும் பிஆர்எஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கோரிக்கை விடுத்தன. காங்கிரஸும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் ஒரு தீர்மானத்தையே நிறைவேற்றியது.

இந்தச் சூழலில் தான் மத்திய அரசு பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், மத்திய அரசிடம் இருந்து இந்த விவகாரத்தில் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எஸ்சி, எஸ்டி பிரிவினர், ஆங்கிலோ-இந்தியர்கள் என அனைத்து தரப்பிலும் பெண்களுக்குச் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

அப்போது என்ன சிக்கல்: கடந்த 2010இல் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்படாமல் போனது. அதேநேரம் அதற்கு முன்பும் இதேபோன்ற மசோதாக்கள் 1996, 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதும் அதை நிறைவேற்ற முடியவில்லை. 1996இல் இந்க விவகாரத்தில் கீதா முகர்ஜி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு மசோதாவை ஆய்வு செய்து ஏழு பரிந்துரைகளை வழங்கியது. அதில் 5 பரிந்துரைகள் 2008இல் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இருந்தது.

இருந்த போதிலும் 2008இல் அதை நிறைவேற்ற முடியவில்லை. அப்போது இந்த மசோதா சட்டம் மற்றும் சமூக நீதிக்கான நிலைக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும், அதிலும் ஒருமித்த முடிவை எட்ட முடியவில்லை. அப்போத அந்த மசோதாவுக்கு கமிட்டியில் உறுப்பினர்களாக இருந்த சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த வீரேந்தர் பாட்டியா மற்றும் சைலேந்திர குமார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விவாதம்: பெண்களுக்கு இட ஒதுக்கீட்டிற்கு தாங்கள் எதிரானவர்கள் இல்லை என்றும் இருப்பினும், இந்த மசோதா உருவாக்கப்பட்ட விதத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதே அவர்கள் முன்வைத்த வாதம். இட ஒதுக்கீடு 20% மேல் இருக்கக் கூடாது என்று தெரிவித்த அவர்கள், அதுவும் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களில் 20 சதவிகிதத்தைப் பெண் வேட்பாளர்களாக அறிவிக்கலாம் என்றனர்.. மேலும், ஒபிசி மற்றும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கீடு வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அப்போது இதில் பல தீர்வுகள் ஆலோசிக்கப்பட்டது. முதலில் அறிவிக்கப்படும் வேட்பாளர்களில் குறிப்பிட்ட சதவிகித வேட்பாளர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்ற ஐடியா முன்வைக்கப்பட்டது. இருப்பினும், வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும் இடங்களில் பெண்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் இது கைவிடப்பட்டது. அடுத்து இரட்டை எம்பி முறை குறித்தும் ஆலோசித்தார்கள். அது பெண் எம்பியின் முக்கியத்துவத்தையே குறைக்கும் என்பதால் அதையும் ஏற்கவில்லை.

மீண்டும் ஒப்புதல்: மேலும், அப்போது ராஜ்யசபாவில் இட ஒதுக்கீடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ராஜ்யசபாவில் single transferable vote முறையில் தேர்தல் நடப்பதால் அங்கே இட ஒதுக்கீட்டிற்கு வாய்ப்பு இல்லை. அதாவது ராஜ்யசபா தேர்தலில் முதல் வேட்பாளருக்குக் குறிப்பிட்ட வாக்குகள் கிடைத்துவிட்டால் அது அடுத்து விருப்பப்பட்ட வேட்பாளருக்குச் செல்லும். இந்த முறை காரணமாக ராஜ்யசபாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப் பல காலமாக நிறைவேற்றவே முடியாமல் இருக்கும் இந்த 33% இட ஒதுக்கீடு மசோதாவுக்குத் தான் மத்திய அமைச்சரவை இப்போது ஒப்புதல் அளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+