தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 7 மாதம் அவகாசம் தர முடியாது: உச்சநீதிமன்றம் உறுதி
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தலை நடத்தும் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா என்று கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், தேர்தலை நடத்த 7 மாதங்கள் கால அவகாசம் தர முடியாது என்று, தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாதம் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
தேர்தல் ஆணையத்தின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலை நடத்தும் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா? என்று கேள்வி எழுப்பினர்.

என்ன பிரச்சினை
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாதங்கள் அவகாசம் வழங்க முடியாது. தேர்தலை நடத்த என்ன பிரச்சினை என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அவகாசம் வழங்க முடியாது என்று கூறினர்.

4 மாதங்கள்
அதேநேரம், தமிழகத்தில் சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன என்பதால் 7 மாதகாலம் கால அவகாசம் கேட்கிறோம், தற்போது அவ்வளவு கூட தேவையில்லை, 3-4 மாதகாலம் அவகாசம் வழங்கினால் கூட போதுமானது என மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்தது.

பிரமாணப் பத்திரம்
ஆனால் தேர்தலை நடத்த அவகாசம் கேட்பது பற்றி 2 நாளில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாதங்கள் அவகாசம் வழங்க முடியாது எனவும் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
கடந்த 2016ம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதன் பிறகும் சுமார் மூன்று ஆண்டுகள் வரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கண்டித்ததைத் தொடர்ந்து கடந்த 2019இல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதிலும், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதிகள் மற்றும் நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. விடுபட்ட அந்த 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வரும் அக்டோபர் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை விரைந்து நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்.. ஏப்.6 ஆம் தேதி வெளியாகும் புதிய வாக்காளர் பட்டியல்! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
ராமதாசுக்கு அதிர்ச்சி! பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அன்புமணி குஷி! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
இன்றே கடைசி.. கடையை மூடும் தேர்தல் ஆணையம்! 2026ல் ஓட்டுப் போட முடியாது? என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications