அதிரடியாக குறையும் ஜிஎஸ்டி.. பட்டுனு சரியும் புதிய வீடுகளின் விலை.. மக்களுக்கு மெகா இன்ப செய்தி ரெடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு ஜிஎஸ்டியை எளிமைப்படுத்தி 2 அடுக்கு முறையைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இந்த இரு அடுக்கு முறை வந்தால் பல பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஜிஎஸ்டி குறைப்பால் ரியல் எஸ்டேட் விலை குறையும் என்றும் இதன் மூலம் மக்கள் குறைந்த செலவில் வீடுகளை வாங்கலாம் என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி அமைப்பை எளிதாக்கும் நோக்கில் மிகப் பெரிய மாற்றம் வரவுள்ளதாக அறிவித்திருந்தார். அதாவது இப்போது 4 அடுக்கு ஜிஎஸ்டி அமலில் இருக்கும் சூழலில் 12% மற்றும் 28% வரியை நீக்க மத்தி அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இனிமேல் பெரும்பாலான பொருட்களுக்கு 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளை ஜிஎஸ்டி மட்டுமே இருக்கும்.

Will 5 and 18 GST Slabs Make Homes Cheaper for Buyers Central govt big push on Real estate

ஜிஎஸ்டி

இது தவிர ஆடம்பரப் பொருட்களுக்கும் புகையிலை போன்ற பொருட்களும் தனியாக 40% சிறப்பு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய அமைப்பு தீபாவளிக்குள் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் வீடுகளின் விலையும் கூட குறைய வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

ரியல் எஸ்டேட்

இப்போது ரியல் எஸ்டேட் துறையில், கட்டுமானப் பொருட்களுக்கு வெவ்வேறு ஜிஎஸ்டி விகிதங்கள் விதிக்கப்படுகின்றன. உதாரணமாக, சிமென்ட்டுக்கு 28%, ஸ்டீலுக்கு 18%, பெயிண்ட்டுக்கு 28%, டைல்ஸ் மற்றும் சானிட்டரி வேர்க்கு 18% என வரி விதிக்கப்படுகிறது. இந்த செலவுகள் தான் வீட்டின் இறுதி விலையை நிர்ணயம் செய்கிறது. மத்திய அரசு வரியை எளிமைப்படுத்தும் நிலையில், டெவலப்பர்களின் செலவுகள் குறையும் என்றும் இதன் பலன்கள் மக்களுக்குச் சென்றடையும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஓஸ்வால் குழுமத்தின் தலைவர் ஆதிஷ் ஓஸ்வால் இது குறித்துக் கூறுகையில், "ரியல் எஸ்டேட்டில் கட்டுமான செலவுகள் குறையும் என்பதால், 5% மற்றும் 18% என்ற இரண்டு ஜிஎஸ்டி அடுக்குகள் ரியல் எஸ்டேட் துறைக்கு நன்மையைத் தரும். குறிப்பாக, சிமென்ட் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு இப்போது அதிக வரி வசூலிக்கப்படுகிறது" என்றார்.

விலை குறையும்

விலை குறையும்போது அதிக மக்கள் ரியல் எஸ்டேட் சந்தையில் நுழைய விரும்புவார்கள். பலரும் வீடு வாங்க ஆர்வம் காட்டுவார்கள். குறிப்பாகக் கோவை, திருச்சி போன்ற 2ம் கட்ட நகரங்களில் மக்கள் அதிகம் வீடு வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய கட்டுமானப் பொருட்களின் மீதான வரிச்சுமையைக் குறைப்பதன் மூலம் மக்கள் வீடுகளை அதிகம் வாங்குவார்கள். இது ரியல் எஸ்டேட் சந்தைக்கு ஒரு உத்வேகத்தைத் தரும்.

வல்லுநர்கள் மேலும் கூறுகையில், "வரி குறையும்போது நிச்சயம் கட்டுமான செலவுகள் குறையும். அது அப்படியே மக்களுக்குச் செல்லும் என நம்புகிறேன். மக்களுக்கு இதன் பலன் செல்வதை உறுதி செய்ய வேண்டும். பண்டிகைக் காலம் நெருங்கும் நிலையில், மக்கள் இப்போது ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த நேரத்தில் வரி குறைப்பு அறிவிப்பு முக்கியமானதாக இருக்கும்" என்றார்.

மோடி சொன்ன தீபாவளி பரிசு என்ன? "இந்த" பொருட்களின் ஜிஎஸ்டி தான் குறைக்கப்படுகிறது! வெளியான தகவல்

எப்போது அறிவிப்பு வரும்?

மொத்தத்தில், இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வீடு வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கும். குறிப்பாக டெவலப்பர்கள் வரிச் சேமிப்பு பலனை நேரடியாக வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்தால் இது பெரிய சாதகமாக அமையும். அடுத்த மாதம் தொடக்கத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் நிலையில், அதில் இறுதி முடிவு தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+