தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வருமா? இந்தியா பாகிஸ்தான் போர்.. பயப்படவே வேண்டாம்.. முப்படை துணையுண்டு!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே நேரடி போர் மூண்டுள்ளது. பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. அதே நேரத்தில் இந்தியாவின் கடைக்கோடியில் இருக்கும் தமிழகத்திற்கு பாதிப்பு வருமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. நேரடியாக தமிழகத்திற்கு எந்த பாதிப்பு இல்லை என்றாலும் பொருளாதார ரீதியாக வரும் நாட்களில் சில பாதிப்புகள் இருக்கலாம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
ஜம்மு காஷ்மீரின் பாஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் கப்பற்படை, விமானப்படை ஆகியவை இணைந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதலை கொடுத்தன.
இதில் 9 நிலைகள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இந்தியாவால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியான மசூத் அசாரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் இந்தியா, பாகிஸ்தான் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை எனவும் தீவிரவாதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக விளக்கம் அளித்திருந்தது.

ஆனாலும் இந்தியாவின் நடவடிக்கை தங்கள் நாட்டின் மீதான நேரடி போர் எனக் கூறிய பாகிஸ்தான், நேற்று நள்ளிரவில் இருந்தே ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டது. அதே நேரத்தில் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் பாகிஸ்தானின் ஏவுகணைகள், ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை சுட்டு வீழ்த்தியது எப்படியும் பாகிஸ்தான் தேவையில்லாமல் தாக்குதல் நடத்தும் என முன்னரே கணித்திருந்த இந்திய ராணுவமும் பாதுகாப்பு படையினரும் தயாராக இருந்த நிலையில், இரவு 9 மணியில் இருந்து இந்தியா மீதான அத்துமீறிய தாக்குதலை பாகிஸ்தான் தொடுத்தது.
அதே நேரத்தில் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகளும் முப்படைகளும் ஏவுகணைகள் ட்ரோன்கள், ஆகியவற்றை தாக்கி தூள் தூளாக்கியது. பாகிஸ்தானின் அத்துமீறிய அடாவடித்தனத்தை தொடர்ந்து காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் தேவை இன்றி வெளியே வர வேண்டாம் எனக் கூறப்பட்டிருக்கும் நிலையில் அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்தியாவின் கடை கோடியில் இருக்கும் தமிழகத்திற்கு ஏதேனும் பிரச்சனை வருமா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணைகள், விமானப்படை, கப்பற்படை உள்ளிட்டவை தயார் நிலையில் இருப்பதால் தென் மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட 100 சதவீதம் வாய்ப்பில்லை. பொதுமக்கள் இது குறித்து எந்தவித அச்சமும் படத் தேவையில்லை என்கின்றனர்.
பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் கடந்த காலங்களில் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நேரடி போர்களில் இந்தியா ஈடுபட்டாலும் தமிழகத்தை பொறுத்தவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பாகிஸ்தானிடம் இந்தியாவை நேரடியாக தாக்க ஏவுகணைகள் உள்ளிட்டவை இருந்தாலும் இந்தியா அதற்கேற்றார் போல் பாதுகாப்பு அமைப்புகளை தயார் படுத்தி வைத்திருக்கிறது. ஒருவேளை இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் இருக்கும் ஒரு சில பகுதிகள் பாதிக்கப்பட்டாலும், தென்கோடியில் இருக்கும் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் வரவே வராது.
மேலும் தமிழகத்தில் கப்பற்படை, விமானப்படை தளங்கள் ஏற்கனவே உஷார் படுத்தப்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. ஒருவேளை போர் தொடர்ந்தால் பொருளாதார ரீதியாக சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வருமே, தவிர பொதுமக்கள் உடமைக்கோ அல்லது பிற வகைகளில் எந்தவித சேதமும் ஏற்படாது. சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை அனைத்து பகுதிகளிலும் கடலோரப் பகுதிகளிலும் கடல் பகுதிகளிலும் பாதுகாப்பு அமைப்புகள் தயாராகவே இருக்கிறது. இந்தியாவின் அதி நவீன பாதுகாப்பு அமைப்புகள் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்த விடாது என்கின்றனர் பாதுகாப்பு துறை நிபுணர்கள்.
-
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications