நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்.. 10 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத் தொடரில் சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, இந்திய உயா்கல்வி ஆணையம் அமைப்பது, வணிகத்தை எளிமைப்படுத்த பெருநிறுவன சட்டங்கள் முன்மொழிவது உள்ளிட்ட 10 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் வரும் டிசம்பா் 1 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில் 15 அமா்வுகள் இடம்பெறவுள்ளன. இந்த கூட்டத் தொடரில் 10 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், நெடுஞ்சாலைகளுக்கு நிலங்கள் கையகப்படுப்படுத்தும் பணிகளை விரைவாக வெளிப்படையாக மேற்கொள்ளும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் சட்ட திருத்த மசோதா இடம்பெற்றுள்ளது.

வணிகத்தை எளிமைப்படுத்தும் வகையில் பெருநிறுவன சட்டங்கள் சட்ட திருத்தம் முன்மொழியப்படவுள்ளது. செபி சட்டம் 1992, வைப்புத்தொகை சட்டம் 1996 மற்றும் பரிவா்த்தன ஒப்பந்தங்கள் ஒழுங்குமுறை சட்டம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து பரிவா்த்தனை சந்தை குறியீடு சட்டம் (எஸ்எம்சி) 2025 மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.
சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, இந்திய உயா் கல்வி ஆணையம் அமைப்பது உள்ளிட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்படவுள்ளன. அதேபோல, கடந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படாத இரு மசோதாக்களும் பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் சட்டம் இயற்ற..
சண்டிகா் யூனியன் பிரதே விவகாரங்களில் குடியரசுத் தலைவரே நேரடியாக சட்டம் இயற்றும் வகையில், 131 ஆவது அரசமைப்புச் சட்ட திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் தேசிய ஆசிரியா்கள் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) ஆகிய மூன்று அமைப்புகளுக்கும் மாற்றாக ஹெச்இசிஐ கொண்டு வரப்படவுள்ளது.
ஹெச்இசிஐ கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது, ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் பொறுப்பு கல்வி அமைச்சகமே தொடரவுள்ளது. மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகள் இந்த அமைப்பின் அதிகார வரம்புக்குள் வராது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications