பிரேக் போட மறந்த டிரைவர்.. காஷ்மீர் டூ பஞ்சாப் 100 கிமீ வேகத்தில் பாய்ந்த ரயில்! கடைசியில் என்னாச்சு
டெல்லி: தலைநகர் டெல்லியில் பல கிமீ தூரத்திற்கு ஆளே இல்லாமல் ஒரு ரயில் தானாக ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் மிகவும் விரிவான ரயில் நெட்வோர்க்கை கொண்ட ஒரு நாடாக இந்தியா இருக்கிறது. இருப்பினும், இந்தியாவில் ரயில்கள் பழமையான தொழில்நுட்பத்தில் இருப்பதாகப் புகார்கள் உள்ளன..அதைக் காட்டும் வகையில் அவ்வப்போது ரயில்வே துறையில் சில சம்பவங்கள் நடக்கும்.

ரயில் விபத்து: அப்படியே ஒரு ரொம்பவே வினோதமான சம்பவம் நமது நாட்டில் அரங்கேறியுள்ளது. ஆளே இல்லாமல் ஒரு ரயில் பல கிமீ தூரத்திற்கு தானாக சென்று உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கதுவா ஸ்டேஷனில் நிறுத்தப்பட்ட சரக்கு ரயில் ஒன்று டிரைவரே இல்லாமல் தானாக பல கிலோமீட்டர் பாய்ந்து சென்றுள்ளது. பஞ்சாப் மாநிலம் முகேரியனில் அந்த ரயிலை நிறுத்தும் முன்பு அது சுமார் 84 கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளது.
இன்று காலை தான் இந்த வினோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இன்று காலை 7 மணியளவில் சரக்கு ரயில், கான்கிரீட் ஏற்றிக் கொண்டு புறப்படத் தயாராக உள்ளது. அப்போது அதன் ரயில் பாதை சற்று சாய்வாக இருந்த நிலையில், அது பதான்கோட் நோக்கி திடீரென நகரத் தொடங்கியுள்ளது. கதுவா ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி டிரைவர் தேநீர் அருந்த அருகே சென்ற போது திடீரென ரயில் தானாகச் செல்ல ஆரம்பித்துவிட்டது.
என்ன காரணம்: இது குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்த முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அதில் டிரைவர் கீழே இறங்கும் முன் ஹேண்ட் பிரேக்கை போட மறந்துவிட்டார். இதன் காரணமாகவே ரயில் தானாகச் செல்ல ஆரம்பித்துவிட்டது. அதன் பிறகே அந்த சரக்கு ரயிலை நிறுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. இருப்பினும், அதை நிறுத்தவே முடியவில்லையாம்.
100 கிலோ வேகம்: கற்களைக் கொண்டு இருந்த இந்த ரயில் சுமார் 100 கிமீ வேகத்தில் ஐந்து நிலையங்களைக் கடந்து சென்றுள்ளது. மொத்தம் 53 பெட்டிகளைக் கொண்ட அந்த ரயில் ஜம்முவில் இருந்து பஞ்சாப் நோக்கிச் சென்றுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நீண்ட முயற்சிக்குப் பின்னரே டசுஹாவுக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் அதிகாரிகள் ரயிலை ஒரு வழியாக வெற்றிகரமாக நிறுத்தியுள்ளது. ரயில் பாதையில் மரக்கட்டைகளைப் போட்டு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பெரும் விபத்து தவிர்ப்பது: நல்வாய்ப்பாக இந்த 84 கிமீ தூரத்திற்கு எதிரே வேறு யாரும் வரவில்லை. அப்படி வந்து இருந்தால் மிகப் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். எதிர்த் திசையில் இருந்து வேறு எந்த ரயிலும் பாதையில் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சேதமோ, காயமோ எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் இந்தியன் ரயில்வே உத்தரவிட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கக் கூடாது என்பதற்காக என்ன பிரச்சினை என்பதைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications