ஓடும் ரயிலில் மின்சார கெட்டிலில் மேகி நூடுல்ஸ் சமைத்த பெண்! 15 பேருக்கு டீ போட்ட அதிர்ச்சி சம்பவம்
டெல்லி: ரயில் பயணங்களில் தொலைதூரம் பயணம் செய்வோர், தங்கள் வீட்டிலிருந்தே தேவையான உணவை தயாரித்து எடுத்து வந்துவிடுவார்கள்.. சிலர் ரயிலுக்குள் உள்ள கேன்டீனிலிருந்து சாப்பிடுவார்கள்.. அல்லது பிளாட்பாரத்தில் விற்கப்படும் உணவை வாங்கி சாப்பிடுவார்கள்.. ஆனால், ஒரு பெண் ரயிலில் நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டுள்ளார்.. என்ன நடந்தது தெரியுமா?
எளிதில் தீ பற்றக்கூடிய பட்டாசுகள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள், அமிலம், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றை ரயில்களில் எடுத்துச் செல்லக்கூடாது என்று ரயில்வேயின் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.

சிறப்பு ரயில்கள் - வார்னிங்
அதனால்தான் ஒவ்வொரு வருடமும் சபரிமலை சீசன் துவங்கும்போதும், ரயில்வே சில முக்கிய எச்சரிக்கையை விடுக்கும்.. காரணம், சிறப்பு ரயில்களில் பக்தர்கள் சிலர், விளக்கு மற்றும் கற்பூரம் ஏற்றி வழிபடுகிறார்கள்.. இதற்கான கடிவாளத்தை சபரிமலை சீசன் துவங்கும் முன்பே ரயில்வே போட்டுவிடும்.
கடந்த முறை சீசன் நேரத்தில் வெளியான அறிவிப்பில், "தீ விபத்துகள். ரயில் பயனாளிகள் மற்றும் ரயில்வே சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், கற்பூரம் அல்லது வேறு ஏதேனும் திறந்த சுடர்/நெருப்பை ஏற்றுவது ரயிலிலும், ரயில் நிலைய வளாகத்திலும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
ரயில் பாதுகாப்பு
எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களுடன் பயணிப்பது அல்லது வைத்திருப்பது கண்டறியப்பட்டால், ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 67, 164 மற்றும் 165 இன் கீழ் தண்டனை விதிக்கப்படும்.
இவ்வாறு எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருள்களுடன் பயணிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்களுக்கு ரூ.1000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். யாரேனும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், "130" என்னும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் அல்லது பணியில் இருக்கும் எந்த ரயில்வே ஊழியர்களையும் அணுகலாம்" என்று கேட்டுக் கொண்டிருந்தது நினைவிருக்கலாம்.
இப்படி பலவிதங்களில் எச்சரிக்கை செய்தும்கூட, சில பயணிகள் ரயில்வே விதிமுறைகளை சரியாக மதிப்பதில்லை.

ஓடும் ரயிலில் மேகி நூடுல்ஸ்
இதோ மகாராஷ்டிராவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அம்மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர், ஓடும் ரயிலில் மேகி நூடுல்ஸ் செய்து சாப்பிட்டுள்ளார்.. அவசரத்துக்கு குடிநீரை காய்ச்சி கொள்வதற்காக பயன்படும் மின்சார கெட்டிலை வைத்து, மேகி நூடுல்ஸை இந்த பெண் சமைத்துள்ளார்...
அதுமட்டுமல்ல, கெட்டிலில் 15 பயணிகளுக்கு டீ போட்டு தயாரித்து தந்திருக்கிறார்.. இதை அந்த பெண்ணே ஒரு வீடியோவில் பேசி, அந்த வீடியோ இணையத்தில் பதிவிட்டுள்ளார்.. இதை பார்த்து பொதுமக்கள் கடுமையான அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
ஆபத்தை உணராத கேஷூவல் பேச்சு
கொஞ்சமும் ஆபத்தை உணராமல், இந்த பெண் மேகி நூடுல்ஸ் சமைத்ததாக கேஷூவலாக சொல்கிறாரே? சம்பந்தப்பட்ட பெண் மீது ரயில்வே அதிகாரிகள் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்..
இதனிடையே பெண்ணின் வீடியோ வைரலானதையடுத்து, ரயில்வேயின் கவனத்துக்கும் சென்றுள்ளது.. சம்பந்தப்பட்ட பெண் பயணி மீது நடவடிக்கையும் எடுத்துள்ளது.

ரயில்வே ஆக்ஷன்
இதுகுறித்து X-ல் ரயில்வே பதிவிட்டுள்ளதில், "ரயில்களுக்குள் மின்னணு கெட்டிலைப் பயன்படுத்துவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. இது பாதுகாப்பற்றது, சட்டவிரோதமானது மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும். இது தீ விபத்துகளுக்கு வழிவகுக்கும் மற்றும் பிற பயணிகளுக்கும் பேரழிவை ஏற்படுத்தும்.
பயணிகள் இதுபோன்ற ஆபத்தான நடத்தைகளில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதுபோன்ற ஏதேனும் செயலை அவர்கள் கவனித்தால், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று பதிவிட்டுள்ளனர்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications