6 ஆண்டு காதல்.. கணவன்-மனைவியாக வாழ்க்கை! டிஎன்ஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்.. புலம்பும் காதலி
டெல்லி: 6 ஆண்டு காதலில் கணவன்-மனைவியாக வாழ்க்கை வாழ்ந்த நிலையில் டிஎன்ஏ சோதனை மேற்கொண்டதில் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இளம்பெண்ணான காதலி புலம்பி வருகிறார்.
காதல்.. உலகம் முழுவதும் அனைவரின் உதட்டிலும் உச்சரிக்கப்படும் ஒற்றை வார்த்தை. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஒவ்வொருவரும் காதல் செய்து வருகின்றனர்.
மேலும் ஆண்டுதோறும் காதல் திருமணம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இதில் சிலர் தோல்வியடைந்தாலும் கூட நாள்தோறும் காதலர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

காதலில் இளம்பெண்
இதனால் இணையதளங்கள், சமூக வலைதளங்களில் இன்றும் பலர் தங்களின் காதல் கவிதை, காதல் அனுபவம் உள்ளிட்டவற்றை பற்றி எழுதி வருகின்றனர். அந்த வகையில் தான் ‛ரெடிட்' பக்கத்தில் பெண் ஒருவர் தனது காதல் பற்றி எழுதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அவர் 6 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து கணவர்-மனைவி போல் வாழ்ந்த நிலையில் தற்போது அவர் தான் உடன் பிறந்த அண்ணன் என்பதை அவர் அறிந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். எப்படி இது நடந்தது? என்பது பற்றி அந்த இளம்பெண் ‛ரெடிட்' பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

தத்தெடுத்து வளர்ப்பு
எனது வயது 30. எனது காதலனின் வயது 32. நான் குழந்தையாக தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவள். உயர்நிலை பள்ளி பயிலும் வரை நான் தத்து மகள் என்பது எனக்கு தெரியாது. அதன்பிறகு அறிந்து கொண்டேன். நான் என் பெற்றோரை நேசிக்கிறேன். என் பெற்றோரும் என்னை அதிகமாக நேசிக்கிறார்கள். இந்நிலையில் நான் ஒருவரை சந்தித்தேன். அவரும் தத்து மகன். அவரை இன்னொரு குடும்பம் தத்தெடுத்து வளர்க்கிறது. அவரும் உயர்நிலை பள்ளி படிக்கும் வரை தத்துமகன் என்பதை அறியவில்லை.

அதிர்ஷ்டசாலிகள்
இருவரும் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டாலும் கூட நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால் எங்கள் இருவருக்கும் நல்ல குடும்பம் அமைந்துள்ளது. நாங்கள் இருவரும் அதிர்ஷ்டசாலிகள் மற்றும் நல்ல குடும்பங்களைக் கொண்டிருந்தோம். எங்கள் இருவருக்கும் இடையேயான பந்தம் சிறப்பாக இருந்தது. இருவரும் ஒருவரையொருவர் வேகமாக புரிந்து கொண்டோம். ஒருவருக்கொருவர் அதிக அன்பு செலுத்த துவங்கினோம்.

6 ஆண்டு காதல்
இது காதலாக மாறியது. கடந்த 6 ஆண்டுகளாக ஒன்றாக ஒரு ஜோடியாக வாழ்ந்து அனைத்தையும் செய்தோம். தற்போது இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறோம். ஒன்றாக இரவுகளை கழித்தோம். நாங்கள் இருவரும் குழந்தைகளைப் பெற விரும்பவில்லை. இதற்கிடையே தான் எங்களின் உண்மையான பெற்றோர் யாராக இருப்பார்கள் என்பது பற்றிய பேச்சு இருவருக்கும் இடையே இருந்தது.

டிஎன்ஏ சோதனை
மேலும் நாம் இருவரும் எத்தகைய டிஎன்ஏவை கொண்டுள்ளோம் என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து இருவரும் டிஎன்ஏ பரிசோதனை செய்து கொள்ள முடிவு செய்தோம். டிஎன்ஏ பரிசோதனையின் முடிவு ஒருமாதம் கழித்து வந்தது. இந்த முடிவை அறிய ஆர்வமாக இருந்தேன். ஆனால் டிஎன்ஏ சோதனை என்பது எனக்கு அதிர்ச்சியை தான் தந்தது.

அதிர்ச்சி முடிவு
அதாவது நாங்கள் இருவரும் சகோதர-சகோதரிகள் என்பது தெரியவந்தது. அவர் என் உடன்பிறந்த சகோதரர். அவர் என் சகோதரன் என்பதால்தான் ஆறுதலும், பாசமும் இருந்ததாக இப்போது உணர்கிறேன். இந்தத் தகவலை இப்போதுதான் தெரிந்து கொண்டேன், என் காதலனான சகோதரனிடம் சொல்லவில்லை. நாங்கள் சகோதர, சகோதரிகள் என தெரியாமல் காதலித்து விட்டோம்.

பயமாக உள்ளது
எங்களை பார்த்த பலரும் ‛‛நீங்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கின்றீர்கள் '' என அடிக்கடி கூறினர். இதற்கான பதில் என்பது இப்போது தான் தெரியவந்துள்ளது. இப்போது என்ன செய்வது என்பது தெரியவில்லை. அவரை சகோதரர் என கூறவும் முடியவில்லை. இதனால் இந்த சோதனை தவறானதாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் பயப்படுகிறேன்'' என கூறியுள்ளார். இந்த பதிவுக்கு தற்போது ரெடிட் பயன்பாட்டாளர்கள் கலவையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications