அன்று பிகினி உடை.. இன்று குட்டை பாவாடையில் குத்தாட்டம்.. டெல்லி மெட்ரோவில் ஷாக்.. கதறும் இளைஞர்கள்
டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள மெட்ரோ நிலையத்தில் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து பேசு பொருள் ஆகி வருகிறது. அப்படி அங்கே நடந்த சம்பவத்தின் வீடியோ ஒன்றுதான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தலைநகர் டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் சில காலமாகவே பேசுபொருள் ஆகியுள்ளது. அங்கு நடக்கும் பல சம்பவங்களின் வீடியோ இணையத்தில் தொடர்ச்சியாக விவாதத்தைக் கிளப்பி வருகிறது.
டெல்லி மெட்ரோ நிர்வாகம் சார்பில் கண்ணியமாக நடந்து கொள்ளும்படி தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

டெல்லி மெட்ரோ: கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டெல்லி மெட்ரோவில் இளம் பெண் ஒருவர் பிகினி உடையில் வந்தார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியிருந்தது. பலரும் அந்த பெண்ணின் செயலை கடுமையாகச் சாடியிருந்தனர். அந்த சர்ச்சை முடிந்த சில காலத்திலேயே இளைஞர் ஒருவர் மெட்ரோ ரயில் நிலையத்திலேயே சுய இன்பம் செய்தார். இந்த வீடியோவும் வெளியான நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர்.
இப்படி டெல்லி மெட்ரோ என்பது பயணத்தைத் தாண்டி பல விவகாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.. குறிப்பாகப் பல வினோதமான டான்ஸ் சம்பவங்களும் அங்கே நடந்து கொண்டு இருக்கிறது.. டெல்லி மெட்ரோவில் ரீல்கள் மற்றும் வீடியோக்களை எடுப்பது தொடர்பாகப் பயணிகள் விமர்சிக்கும் போதிலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது டெல்லியில் மீண்டும் நடந்துள்ளது.

மினி ஸ்கர்ட்: டெல்லி மெட்ரோவில் மினி ஸ்கர்ட் அணிந்த பெண் ஒருவர் பஞ்சாபி பாடலுக்கு டான்ஸ் ஆடும் வீடியோ தான் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இன்ஸ்டாகிராம் தளத்தில் அந்த பெண் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். சிவப்பு நிற மேல்சட்டை, மினிஸ்கர்ட் அணிந்திருந்த அந் பெண், பஞ்சாபி பாடல் ஒன்றுக்குக் குத்தாட்டம் போட்டுள்ளார். அவர் டான்ஸ் ஆட தொடங்கும் போது, உள்ளே இருந்த பலரும் அதிருப்தி அடைந்தனர்.
சிலர் அங்கிருந்து கிளம்ப முயல்வதும் பதிவாகியுள்ளது. இந்த இளம்பெண் டான்ஸ் ஆடும் போது, பிளாக் டிரஸ் போட்ட மற்றொரு பெண்ணும் அந்த வீடியோவில் சின்னதாக டான்ஸ் ஆடுகிறார். இந்த வீடியோவும் இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அனுமதி இல்லை: இதில் விஷயம் என்னவென்றால் டெல்லி மெட்ரோவில் வீடியோ எடுக்கத் தடை இருக்கிறது. இப்படி தடை இருந்த போதிலும், அந்த பெண் அதைத் தாண்டி வீடியோ எடுத்துள்ளார்.. இந்த வீடியோவை பகிர்ந்த அந்த பெண், "ஆமாம், இதற்கு அனுமதியில்லை என்று எனக்குத் தெரியும்.. ஆனால் நான் டெல்லி மெட்ரோவில் இதைச் செய்ய வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் ஆசை" என்று பதிவிட்டுள்ளார்.

கிளம்பிய எதிர்ப்பு: இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஒருவர் நக்கலாக, "ஆமாம் மெட்ரோவில் கொலை செய்ய முடியாது என்று எனக்கும் தெரியும்.. ஆனால், டெல்லியில் அதைச் செய்ய வேண்டும் என அசையாக இருக்கிறது. இதை அனுமதிக்க வேண்டும்" என்று நக்கலடித்துள்ளார்.
அதேபோல டெல்லி மெட்ரோவில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருவதாகவும் டெல்லி மெட்ரோவில் பயணிக்கவே முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். இதுபோல விதிமீறலில் பெண்கள் ஈடுபடும்போது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று இளைஞர்கள் ஒரு பக்கம் கிளம்பியுள்ளனர்.
டெல்லி மெட்ரோவில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருப்பதாகவும் பதிவிட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களை ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே பலரும் சாடி வருகின்றனர்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications