"அத்தனையும் ஆபாசம்!" போராடிய விவசாயிகளை நோக்கி இளம்பெண் செய்த காரியம்! டெல்லி போராட்டத்தில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் போது இளம்பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை நோக்கி ஆபாசமாக நடுவிரலைக் காட்டிய வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பி உள்ளது.

தலைநகர் டெல்லியில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்று விவசாயிகள் பந்த் போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்து இருந்தனர்.

Woman Shows Middle Finger To Farmers Blocking Road in delhi farmers protest

இதற்கிடையே போராட்டத்தின் போது இரண்டு பெண்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ஆபாசம்: அந்த பெண்கள் காரில் சென்று கொண்டு இருந்த நிலையில், அவர்கள் வாகனத்தை விவசாயிகள் சிலர் நிறுத்தியதால் அந்த இரு பெண்கள் ஆத்திரமடைந்தனர். அப்போது காரை ஓட்டி வந்த பெண், விவசாயிகளைப் பார்த்து ஆபாசமான சைகையைச் செய்துள்ளார். மேலும், தன்னை விவசாயிகள் சிலர் தகாத முறையில் தொட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

அதில் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை நோக்கி பெண் ஒருவர் நடுவிரலைக் காட்டுகிறார். அத்துடன் நிற்காமல் அந்த பெண் விவசாயிகளைப் பார்த்து ஆவேசமாகக் கத்துகிறார். மேலும் கார் கண்ணாடியை இறக்கிய அவர் எதற்காக எனது காரை நிறுத்துகிறார்கள் எனக் கத்துகிறார். தொடர்ந்து மொபைலை எடுத்து ரெக்கார்ட் செய்யவும் தொடங்குகிறார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் மொபைலை பிடுங்க முயல்கிறார்.

பாலியல் அத்துமீறல் புகார்: உடனே மேலும் ஆவேசமடைந்த அந்த பெண் அவர்களைப் பார்த்துக் கத்திக்கொண்டே இருக்கிறார். மேலும், அந்த பெண், "என்ன அடிக்க கை ஓங்க நீ யார்.. என்னைத் தாக்க முயன்று இருக்கிறீர்கள்.. என்னைத் தகாத முறையில் தொட்டு இருக்கிறார்கள்" என்று தொடர்ந்து கத்திக் கொண்டே இருக்கிறார். அப்போது அங்கிருந்த வேறு சில விவசாயிகள் வந்து சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும், அதைக் காதில் வாங்காமல் அந்த பெண் சத்தம் போட்டுக் கொண்டே இருக்கிறார். இந்தச் சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்துத் தெரியவில்லை.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அந்த பெண்ணை பாராட்டும் ஒரு தரப்பினர், யாருக்கும் காரை மறித்து கேள்வி கேட்க உரிமை இல்லை எனக் கூறி வருகின்றனர். அதேநேரம் மற்றொரு தரப்பினர் தனது செயலுக்கு நியாயம் கற்பிக்க முடியாமல் அந்த பெண், பொய்யாக பாலியல் எனச் சொல்வதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்: கடந்த சில நாட்களாகவே விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லி நுழைவாயில்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி புறநகரில் வசிக்கும் மக்கள் டெல்லிக்குள் நுழைய சிரமத்தை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவமும் அதுபோல ஒரு இடத்தில் தான் நடந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் முதல் மரணம் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 65 வயதான விவசாயி இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். போராட்டத்தின் போது வீசப்பட்ட கண்ணீர்ப் புகைக் குண்டுகளே இதற்குக் காரணம் என்று உயிரிழந்த விவசாயிகளின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+