Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியை உலுக்கிய இளம் பெண் பலி.. "ரோடெல்லாம் தரதரவென இழுத்து.." பின்னணியில் பாஜக புள்ளி: ஆம் ஆத்மி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவர் காரில் பல கி.மீட்டர் தொலைவுக்கு இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஒருவர் பாஜக பிரமுகர் என்றும் டெல்லி காவல் துறை இதை திட்டமிட்டு மறைப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஆம் ஆத்மியின் இந்த குற்றச்சாட்டிற்கு பாஜகவும் பதிலடி கொடுத்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்த நேற்று அதிகாலை நேரத்தில் டெல்லியில் நடைபெற்ற ஒரு சம்பம் பெரும் ரணத்தை கொடுத்துள்ளது.

டெல்லியின் சுல்தான்புரி பகுதியில் 20 வயதே ஆன இளம்பெண் ஒருவர் தனது ஸ்கூட்டி பைக்கில் வெளியே சென்று விட்டு அதிகாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது இளம்பெண் வந்த ஸ்கூட்டி மீது மாருதி பெலேனா கார் ஒன்று மோதியது. மோதியதோடு நிற்காமல் அந்த கார் சென்றுள்ளது. இதில் காரில் சிக்கிய இளம்பெண் பல கிலோமீட்டர் தொலைவுக்கு சாலையில் தரதரவென இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

சாலையில் இளம்பெண் சடலம்

சாலையில் இளம்பெண் சடலம்

ஆடைகள் கிழிந்த நிலையில் நிர்வாணமாக பெண் இழுத்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த சிலர் பதறிப்போய் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இருந்தாலும் காரை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் இளம்பெண் சடலம் சாலையில் நிர்வாணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் இளம்பெண் சடலத்தை மீட்டுள்ளனர்.

5 பேர் கைது

5 பேர் கைது

சிசிடிவி கேமாரவை ஆய்வு செய்து பார்த்து இளம்பெண் மீது மோதிவிட்டு காரை நிறுத்தாமல் ஓட்டிச்சென்று இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த காரின் ஓட்டுநர் உள்பட அவருடன் வந்த ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் வெட்கி தலைகுனிவதாக டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா தனது ட்விட் பதிவில் கூறியிருந்தார்.

பாஜகவை சேர்ந்தவர்

பாஜகவை சேர்ந்தவர்

அதோடு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இது அரிதிலும் அரிதான குற்றம் என்றும் குற்ற்றவாளிகளுக்கு அரசியல் தொடர்பு இருந்தாலும் எந்த மெத்தனமும் காட்டாமல் கடும் நடவடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனிடையே, இளம்பெண் காரில் இழுத்துச்செல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடை ஒருவர் பாஜகவை சேர்ந்தவர் என்றும் ஆம் ஆத்மி கட்கி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

திட்டமிட்டு மறைக்கின்றனர்

திட்டமிட்டு மறைக்கின்றனர்

இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறியதாவது:- "இந்த வழக்கில் இன்று கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவரான மனோஜ் மிட்டல் என்பவர் பாஜகவை சேர்ந்தவர். துணை நிலை ஆளுநர் விகே சக்சேனாவும் டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகளும் இதை திட்டமிட்டு மறைக்கின்றனர்" என்றார். ஆம் ஆத்மியின் இந்தக் குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்துள்ள டெல்லி பாஜக ஊடக பிரிவு தலைவர் ஹரிஷ் கவுரனா, "குற்றம் சாட்டப்பட்ட நபர்களை போலீஸ் கைது செய்துள்ளது. குற்றவாளிகள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் கடும் தண்டனை வழங்க வேண்டும்" என்றார்.

குற்றவாளிகளை பிடிக்க தவறிவிட்டனர்

குற்றவாளிகளை பிடிக்க தவறிவிட்டனர்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பரத்வாஜ் டெல்லி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சாடினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாகவும் 22க்கும் மேற்பட்ட முறை போன் செய்த போதிலும் குற்றவாளிகளை கையும் களவுமாக பிடிக்க தவறிவிட்டனர். தங்கள் கார் விபத்துக்குள்ளானது தெரியும் என்றும் ஆனால் பெண் காரில் இழுத்து வருவது பற்றி தெரியாது என குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறியதாக டெல்லி போலீஸ் கூறுகிறது.

சத்தம் கேட்கவில்லை

சத்தம் கேட்கவில்லை

ஒரு பாலித்தின் கவர் சிக்கினால் கூட சத்தம் எழும். உடனே நிறுத்தி என்ன பிரச்சினை என்று நாம் பார்ப்போம். ஆனால், இங்கே ஒரு உடல் 12 கி.மீட்டர் தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்டுள்ளது. ஆனால், காரில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்பட்டுள்ளது. அதனால், சத்தம் கேட்கவில்லை என்று டெல்லி போலீஸ் கூறுகிறது. குடும்பத்தினர் முன்வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+