நிர்பயாவை நினைவூட்டும் பயங்கரம்.. ரயில் நிலையத்தில் ஊழியர்களால் பெண் பலாத்காரம்! தலைநகரில் தலைகுனிவு
டெல்லி: ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்களால் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடுரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக கணவனை விட்டு பிரிந்த 30 வயது பெண் ஒருவருக்கும் டெல்லி ரயில் நிலையத்தில் மின் பராமரிப்பு ஊழியராக இருக்கும் நபருக்கும் நண்பர் மூலமாக பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
அந்த பெண்ணுக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி நம்பிக்கை அளித்து இருக்கிறார் ரயில்வேயில் பணிபுரியும் அந்த நபர். இதன் மூலம் இருவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பிறந்தநாள் அழைப்பு
இந்த நிலையில் நேற்று முந்தினம் தனது மகனுக்கு பிறந்தநாள் என்றும், தான் புதிதாக கட்டிய வீட்டிற்கு வருமாறும் பெண்ணுக்கு அந்த நபர் அழைப்பு விடுத்து இருக்கிறார். இதனை நம்பி அந்த பெண் இரவு 10 மணியளவில் கீர்த்திநகர் மெட்ரோ ரயில் நிலையம் சென்றுள்ளார். அங்கு வந்த அவர், அப்பெண்ணை அழைத்துக் கொண்டு தான் பணிபுரியும் ரயில் நிலையத்துக்கு சென்று இருக்கிறார்.

கூட்டு பலாத்காரம்
அங்கு அந்த பெண்ணை மின் பராமரிப்பாளர்களின் ஓய்வு அறையில் அமர்ந்து இருக்கும்படி அந்த நபர் கூறியுள்ளார். இதை நம்பிய பெண் ஓய்வு அறையில் இருந்தபோது, அந்த நபர் ரயில்வேயில் பணிபுரியும் 3 பேருடன் அங்கு வந்து அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளனர். பெண்ணுடன் பழகிய நபரும், அவரது நண்பரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய அதை யாரும் பார்த்துவிடாத வகையில் 2 பேர் வெளியில் காவல் காத்துள்ளனர்.

போலீசாரிடம் புகார்
இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு அங்கிருந்த நடைமேடையில் பெண்ணை விட்டுவிட்டு 4 பேரும் தப்பிச்சென்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணை கண்ட மற்ற ரயில்வே ஊழியர்கள் மீட்டு விசாரித்தனர். அவர்களிடம் தனக்கு நேர்ந்த பயங்கரத்தை கூறி இருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண். இதனால் அதிர்ச்சியடைந்த ரயில்வே ஊழியர்கள் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் புகாரளித்தனர்.

4 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பலாத்காரம் செய்த 2 பேர் மற்றும் காவலுக்கு நின்ற 2 பேர் என 4 ரயில்வே ஊழியர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லி பேருந்தில் நிர்பயா என்ற பெண் பலரால் கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், தற்போது அதை நினைவுபடுத்தும் வகையில் ரயில் நிலையத்தில் இந்த பயங்கரம் அரங்கேறி இருக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications