டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'பிகினியோ; ஜீன்ஸோ.. தான் விரும்புவதை அணிய பெண்களுக்கு உரிமை உண்டு'.. பிரியங்கா காந்தி அதிரடி ட்வீட்

Google Oneindia Tamil News

டெல்லி: பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் என்று கர்நாடகா ஹிஜாப் விவகாரம் குறித்து பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். தான் விரும்பும் உடைகளை அணிய பெண்களுக்கு உரிமை உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

கர்நாடகா மாநிலம் மங்களூரில் உள்ள இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிகளுக்கு வருவதற்கு எதிராக சில இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.இதனால் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள், குல்லா, ஹிஜாப், பருதா, புர்கா போன்றவை அணிந்து கல்லூரிகளுக்கு வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

வேத மந்திரம் ஓதி யமுனையில் பூஜை.. எடுபடுமா பிரியங்கா காந்தி யுக்தி? உபியில் அனல் பறக்கும் பிரசாரம் வேத மந்திரம் ஓதி யமுனையில் பூஜை.. எடுபடுமா பிரியங்கா காந்தி யுக்தி? உபியில் அனல் பறக்கும் பிரசாரம்

ஹிஜாப் விவகாரம்

ஹிஜாப் விவகாரம்

கடந்த ஆண்டு இறுதியில் உடுப்பியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாணவிகள் பல நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். ''ஆடை அணிவது என்பது எங்களின் உரிமை. இதனை யாரும் தடுக்க முடியாது'' என்று அவர்கள் கர்நாடகா உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் தெரிவித்தனர்.

 கர்நாடகா முழுவதும் பதற்றம்

கர்நாடகா முழுவதும் பதற்றம்

இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால், ''நாங்கள் காவி துண்டு அணிந்து வருவோம்'' என்று கூறி சில மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்தனர். சில மாணவிகள் காவி துப்பட்டா அணிந்து வந்தனர். இதனால் கர்நாடகா முழுவதும் பதற்றம் நிலவியதால் கர்நாடகா முழுவதும் மாணவ-மாணவிகள் பொதுவான சீருடை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டது. நேற்று ஒரு மாணவி ஹிஜாப் அணிந்து வந்த நிலையில் இதற்கு பதில் காவி அணிந்து வந்த மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரியங்கா காந்தி அதிரடி கருத்து

பிரியங்கா காந்தி அதிரடி கருத்து

சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்தன. இந்த நிலையில் கர்நாடகா ஹிஜாப் விவகாரம் குறித்து பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ' பிகினி, கூங்காட், ஒரு ஜோடி ஜீன்ஸ் அல்லது ஹிஜாப் என எந்த ஆடையாக இருந்தாலும் தான் விரும்பும் உடைகளை அணிய பெண்களுக்கு உரிமை உள்ளது. இந்த உரிமை இந்திய அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்' என்று கூறியுள்ளார்.

பிகினி உடையில் புனித தலங்களுக்கு செல்ல முடியுமா?

பிகினி உடையில் புனித தலங்களுக்கு செல்ல முடியுமா?

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஏற்கனவே கருத்து தெரிவித்த நிலையில் தற்போது பிரியங்கா காந்தி கருத்து கூறியுள்ளார். பிரியங்கா காந்தியின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ''நீங்கள் சொல்வதுதான் சரி'' என்று ஒரு தரப்பும், ''இது தவறான கருத்து பிகினியில் உங்கள் கல்லூரிக்கோ அல்லது குருத்வாராவுக்கோ செல்ல முடியாது'' வேறு ஓரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

English summary
Priyanka Gandhi comments on the issue of Karnataka hijab: Stop harassing women. He has said that women have the right to wear the clothes they want. Priyanka Gandhi is currently commenting on the issue while Congress MP Rahul Gandhi has already commented on the matter
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X