ஆட்சி மாற்றம் எதிரொலி- ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகார் மீது இனி தமிழகத்தில் விசாரணைக்கு வாய்ப்பு?
டெல்லி: தமிழக ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகாரை ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலேயே விசாரிக்கலாம் என புகார் தந்த பெண் எஸ்.பி. உச்சநீதிமன்றத்தில் புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
தமிழக லஞ்ச ஒழிப்புதுறை ஐஜியாக இருந்த முருகன் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எஸ்.பி ஒருவர் கடந்த 2018-ம் ஆண்டு புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரித்த விசாகா கமிட்டி, இந்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்குப் பரிந்துரை செய்தது.

தெலுங்கானாவில் விசாரணை
ஆனால் சிபிசிஐடி முறையாக விசாரணை நடத்தவில்லை என கூறியும், வழக்கு விசாரணையை வேறு மாதிலத்துக்கு மாற்றக்கோரியும் புகாரளித்த பெண். எஸ்.பி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஐ.ஜி. முருகனுக்கு எதிரான பாலியல் புகார் வழக்கின் விசாரணை மற்றும் அது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறை பதிவு செய்துள்ள வழக்குகளை தெலுங்கானா மாநில காவல்துறையை விசாரிக்க உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம் தடை
மேலும் இந்த வழக்கை தெலுங்கான டி.ஜி.பி மேற்பார்வையிட வேண்டும்; இந்த புகார் மீதான விசாரணையை 6 மாதத்துக்குள் விசாரித்து முடித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து ஐ.ஜி. முருகன் மற்றும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உச்சநீதிமன்றம், தெலுங்கானா மாநிலத்தில் இந்த விவகாரத்தை மாற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

ஆட்சி மாற்றத்தால் தமிழகத்திலேயே விசாரணை
இந்த நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது; ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார் வழக்கு விவகாரத்தை தமிழகத்தில் விசாரிக்கலாம். தற்போது தமிழ்நாட்டில் இந்த வழக்கு விசாரிக்கும்போது தனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புவதாக புகார் அளித்த பெண் எஸ்.பி பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பதாக சுட்டிக்காட்டினார். மேலும், இந்த விவகாரத்தில் மனுதாரர்களின் கோரிக்கையான தமிழகத்திலேயே விசாரணை நடத்த வேண்டும் என்பதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லாததால் மனுக்கள் அத்தனையையும் முடித்து வைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.

விசாரணை ஒத்திவைப்பு
ஐ.ஜி முருகன் தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி ஆஜராகி தனது வாதத்தை எடுத்து வைக்க முற்பட்டபோது சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவரின் குரல் கேட்கவில்லை, இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து மனுக்களையும் வரும் திங்கட்கிழமை ஒன்றாக பட்டியலிட்டு விசாரித்து அன்றைய தினம் முடிவு அறிவிக்கப்படும் என கூறி வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
-
69% இடஒதுக்கீடு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.. மனுக்கள் தள்ளுபடி.. என்ன நடந்தது? -
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications