பிரேக் தேவை.. எங்களுக்கும் சோர்வு ஏற்படும்.. உருக்கமாக பேசிய பும்ரா- அணிக்குள் இப்படி ஒரு பிரச்சனையா
டெல்லி: உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்தியாவின் தொடர் தோல்விக்கு வீரர்கள் சோர்வாக இருப்பதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணி தொடர்ந்து கிரிக்கெட் தொடர்களில் ஆடி வருகிறது.
Recommended Video
ஆஸ்திரேலிய தொடர், இங்கிலாந்து இந்தியா டூர், இந்தியா இங்கிலாந்து டூர், ஐபிஎல் 2021 சீசனின் இரண்டு பாதி ஆட்டங்கள், உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்று அடுத்தடுத்து பல்வேறு போட்டிகளில் ஆடி இந்திய அணி வீரர்கள் களைத்து போய் உள்ளனர்.
இது தற்போது மைதானத்திலும் எதிரொலித்து உள்ளது. கொரோனா பயோ பபுள் விதிகள் இந்திய அணிக்கு எதிராக திரும்பி உள்ளதாக ரசிகர்கள், வல்லுனர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

வல்லுனர்கள்
முக்கியமாக தொடர்ந்து இந்திய அணிகள் அடுத்தடுத்த போட்டிகளில் ஆடி வருவதும் அணியின் வீரர்களை சோர்வடைய வைத்துள்ளது. இதனால் பல வீரர்கள் பார்ம் இழந்துள்ளனர். அவர்களுக்கு போதிய ஓய்வு கிடைக்கவில்லை, இதுவும் தோல்விக்கு ஒரு வகையில் காரணம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அணி போல நமக்கு ஓய்வு கிடைக்கவில்லை.

பேட்டிங்
இந்த நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு பின் பும்ரா அளித்த பேட்டியில் இதே விஷயத்தை குற்றச்சாட்டாக குறிப்பிட்டுள்ளார். தொடர் ஆட்டங்கள் காரணமாக அணிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனையை அவர் பேசியுள்ளார். அதில், இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நன்றாகவே ஆடி இருந்தனர். அவர்கள் சிங்கிள் எடுக்க பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பீல்டிங் செட்டப் அந்த வகையில் இருந்தது. இதனால் அட்டாக்கிங் ஷாட் அடிக்க முயன்றனர். ஆனால் மைதானம் பெரியதாக இருந்தது.

மைதானம்
இதனால் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தது. அவர்கள் அதிக அளவில் ஸ்லோ பால் வீசினார்கள். அதேபோல் மைதானத்தில் நாங்கள் பேட்டிங் செய்த போது பனியே இல்லை. எங்களுக்கும் பிரேக் தேவை. நாங்களும் தொடர்ந்து ஆடி வருகிறோம். தொடர்ந்து பயோ பபுளில் இருக்கிறோம்.

பிரேக் வேண்டும்
சமயங்களில் நீங்கள் உங்கள் குடும்பத்தை மிஸ் செய்வீர்கள். நாங்கள் 6 மாதமாக வெளியே இருக்கிறோம். ஒரு பபுள் விட்டு இன்னொரு பபுளுக்கு சென்று கொண்டு இருக்கிறோம். சமயங்களில் இது போன்ற விஷயங்கள் உங்கள் கவனத்தில் இருக்கும். ஆனால் மைதானத்தில் ஆடும் போது நாங்கள் இதை பற்றி நினைக்க மாட்டோம். ஆட்டத்தின் நேரம், காலம், எங்கே ஆட வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்க முடியாது.

ஆட வேண்டும்
ஆனால் நீண்ட காலம் பபுளில் இருப்பதும், வீட்டை விட்டு தொடர்ந்து வெளியே இருப்பதும் ஒரு வகையில் அணி வீரர்களின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். மன ரீதியான சோர்வை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பிசிசிஐ எங்களை நன்றாக பார்த்துக்கொள்வதற்காக அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.

உண்மை
உண்மையை பேச வேண்டும் என்றால்.. நாம் பெருந்தொற்று காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இது மிகவும் கஷ்டமான காலம். அதிலும் நாங்கள் பயோ பபுளில் தொடர்ந்து சிக்கி தவித்துக்கொண்டு இருக்கிறோம். இதனால் ஏற்படும் களைப்பு எங்களை பாதிக்கிறது. சில விஷயங்களை நம்மால் மாற்ற முடியாது, கட்டுப்படுத்த முடியாது என்று பும்ரா கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications