"இன்னும் 2 நாளில் 3ம் உலக போர் வெடிக்கும்.." பிரபல ஜோதிடர் கணிப்பு.. மிரண்டு பார்க்கும் உலக நாடுகள்
டெல்லி: இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் இன்னும் 48 மணி நேரத்தில் 3ம் உலகப் போர் தொடங்கும் என்ற பகீர் கணிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ரஷ்யா - உக்ரைன் மோதல், இஸ்ரேல் போரைத் துல்லியமாகக் கணித்த இவர், இப்போது 3ம் உலகப் போர் குறித்த இந்த கணிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது சர்வதேச அளவில் ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள யாருக்குத் தான் அசை இருக்காது. இதன் காரணமாகவே எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லும் ஜோசியகாரர்களுக்கு எப்போதும் அதிக மவுசு இருக்கிறது.

பாபா வாங்கா: ஜோசியகாரர்கள் நமது வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல முயல்வார்கள்.. ஆனால், சிலருக்கு உலகில் வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கூட துல்லியமாகக் கணிக்க முடியும். பாபா வாங்கா அப்படியோர் அரிய சக்தியைப் பெற்றவர். அவர் வரும் காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் எனப் பல கணிப்புகளை விட்டுச் சென்றார். அதில் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் தொடங்கிப் பல விஷயங்கள் அப்படியே நடந்துள்ளன.
நாஸ்ட்ராடாமஸ்: அவரை போலவே பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நாஸ்ட்ராடாமஸ் என்பவர் இருக்கிறார். 1500களில் வாழ்ந்த இவரது பல கணிப்புகளும் அப்படியே நடந்துள்ளன. இதனால் இந்த நாஸ்ட்ராடாமஸுக்கு எப்போதுமே ஒரு மதிப்பு இருக்கும். இதற்கிடையே இந்திய நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பிரபல ஜோதிடர் உலகப் போர் குறித்து சில பகீர் கணிப்புகளை வெளியிட்டுள்ளார். அவரது இந்தக் கணிப்புகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அதாவது இன்று ஆகஸ்ட் 4 அல்லது நாளை ஆகஸ்ட் 5ஆம் தேதிகளில் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். இஸ்ரேல்- ஹமாஸ் போர் மற்றும் ரஷ்யா- உக்ரைன் மோதலை சரியாக முன்கூட்டியே கணித்த அவர், இப்போது உலகப் போர் குறித்துக் கணித்துள்ளார். புவிசார் அரசியல் மோதல்கள் எல்லாம் சேர்ந்து 3ம் உலகப் போராக வெடிக்கும் என்பதே அவரது கணிப்பாகும். இந்த கணிப்புகளைச் செய்தவர் வேறு யாரும் இல்லை. பிரபல ஜோதிடர் குஷால் குமார் தான்.
3ம் உலகப் போர்: அதேநேரம் மூன்றாம் உலகப் போர் குறித்து குஷால் குமார் கணிப்பது இது முதல் முறை இல்லை. இருப்பினும், உக்ரைன், இஸ்ரேல் போர்களைப் போல மூன்றாவது உலகப் போர் குறித்த இவரது கணிப்புகள் நடக்கவில்லை. முன்னதாக இவர் கடந்த ஜூன் 18ம் தேதி 3ம் உலகப் போர் தொடங்கும் என்று அவர் அறிவித்தார்..ஆனால் அந்த தேதியில் எந்தவொரு அசம்பாவிதமும் இல்லாமல் கடந்துவிட்டது. பின்னர் ஜூலை 26 முதல் 28க்குள் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என்று கணித்தார்.. ஆனால், அப்போதும் எதுவும் நடக்கவில்லை.
இந்தச் சூழலில் தான் அவர் அடுத்த 48 மணி நேரத்தில் உலகப் போர் தொடங்கும் என இப்போது மீண்டும் கணித்துள்ளார். இந்த முறையாவது அவரது கணிப்பு உண்மையாக நடக்குமா.. அல்லது இந்த முறையும் எதுவும் நடக்காமல் உலக அமைதி தொடருமா என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.
யார் இவர்: குஷால் குமார் ஹரியானாவின் பஞ்சகுலாவைச் சேர்ந்த வேத ஜோதிட முறையைப் பின்பற்றி வருபவர். ஜோதிடத்தில் அவர் எழுதியுள்ள புத்தகங்கள் அமெரிக்காவில் வெளியாகும் பல முன்னணி ஜோதிட இதழ்களில் கட்டுரைகளாக வெளியாகியுள்ளன. பொருளாதாரம், வானிலை, வணிகம், சர்வதேச மோதல்கள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் இவரது கணிப்புகள் பல முறை அப்படியே நடந்துள்ளன.
பிறந்த நேரத்தை மட்டும் சொன்னால் கூட அவர் வாழ்க்கையை மொத்தமாகக் கணித்துவிடுவாராம். ஆனாலும், பாவம் இவரால் இதுவரை 3ம் உலகப் போர் குறித்து மட்டும் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. இந்த முறையாவது இவரது கணிப்பு உண்மையாகுமா என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications