மீண்டும் தீவிரமடையும் கொரோனா..பிரேசில், அமெரிக்காவில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. பீதியில் உலக நாடுகள்
டெல்லி: பிரேசில் நாட்டில் நேற்று ஒரு நாளில் மட்டும் 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11.95 கோடியைக் கடந்துள்ளது.
பிரேசில் நாட்டில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாகவே மிகவும் மோசாக உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு அமெரிக்காவைவிடப் பிரேசில் நாட்டில் மோசமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 84,047 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல அமெரிக்காவில் 68,216 பேருக்கும் இத்தாலி நாட்டில் 26,793 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,90,203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் இதுவரை 11,95,99,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகெங்கும் 9,474 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2,152 பேர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள், 1,529 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை உலகளவில் மொத்தம் 26,51,031 பேர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளனர்.
தற்போது உலகம் முழுவதும் 2,06,83,642 பேர் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா நாடுகளில் வைரஸ் பாதிப்பு மீண்டும் மோசமடைந்துள்ளது, உலகில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ள டாப் 10 நாடுகள் இந்த இரு கண்டங்களைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications