கொரோனா வைரஸ் திடீர் வேகம்... கைவிரிக்கும் உலக நாடுகள்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்
டெல்லி: உலகெங்கும் கொரோனா பரவல் மீண்டும் உச்சமடைந்துள்ள நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
உலகெங்கும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 5,14,324 பேருக்கு கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாகப் பிரேசில் நாட்டில் 90,830 பேருக்கும் அமெரிக்காவில் 59,770 பேருக்கும் பிரான்ஸ் நாட்டில் 38,501 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்
அதேபோல சிகிச்சை பலனிற்றி நேற்று மட்டும் 9,390 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகப் பிரேசில் நாட்டில் 2,736 பேரும் அமெரிக்காவில் 1,919 பேருக்கும் இத்தாலியில் 431 பேரும் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளனர். தற்போது வரை அமெரிக்காவில் 3.19 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல பிரேசில் நாட்டில் 1.17 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது உலகெங்கும் 2.09 கோடி பேர் கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மத்திய கிழக்கு நாடுகள்
கடந்த சில நாட்களாகவே ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே கொரோனா பரவல் தீவிரமாக இருந்த நிலையில், தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,912 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தற்போது தீவிரமாக உள்ள டாப் 10 நாடுகளில் 5 ஐரோப்பாவைச் சேர்ந்தவை. அதேபோல மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த இரண்டு நாடுகளும் டாப் 10 நாடுகளில் உள்ளன.

தீவிர ஆலோசனை
அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்த அந்நாடு தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன பிரிட்டன் நாட்டைப் போல மீண்டும் லாக்டவுனை அமல்படுத்துவது குறித்தும் பல நாடுகள் ஆலோசனை நடத்தியுள்ளன.

மீண்டும் லாக்டவுன்
இருப்பினும், லாக்டவுன் காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கும் என்பதால் அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகளும்கூட மீண்டும் லாக்டவுனை அமல்படுத்தும் எண்ணத்தில் இல்லை என்றே தெரிகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications