டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீர் வேகம்... பல மடங்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு... உயரும் உயிரிழப்புகள்... பீதியில் உலக நாடுகள்

Google Oneindia Tamil News

டெல்லி: உலகளவில் தினசரி கொரோனா பாதிப்பு 7.72 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பும் 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. உருமாறிய கொரோனா, பொதுமக்களின் அலட்சியப்போக்கு ஆகியவை கொரோனா அதிகரிக்க முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. ஆனால், இப்போது மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலும் கொரோனா வேகம் உச்சத்தில் உள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் 7,72,497 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரஸ் பாதிப்பு 1,35,276,470 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல உலகளவில் தினசரி கொரோனா உயிரிழப்பும் 13,076 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா காரணமாக உலகெங்கும் 29,27,492 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பேர் கொரோனா பாதிப்பில் இருந்து 10,88,48,469 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ரொம்ப மோசம்

இந்தியாவில் ரொம்ப மோசம்

அதிகபட்சமாக இந்தியாவில் கடந்த ஒரு நாளில் மட்டும் 1,44,829 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.3 கோடியை தாண்டியுள்ளது. அதேபோல நேற்று மட்டும் இந்தியாவில் கொரோனா காரணமாக 773 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,68,467ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்கா பிரேசில்

அமெரிக்கா பிரேசில்

இந்தியாவுக்கு அடுத்து, அமெரிக்காவில் நேற்று 83,405 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 903 பேர் உயிரிழந்துள்ளனர், இதுவரை அமெரிக்காவில் 3,18,00,809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல 5,74,814 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 89,090ஆகவும், உயிரிழப்பும் 3,647ஆகவும் பதிவாகியுள்ளது. அங்கு இதுவரை 1,33,75,414 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பிரேசிலில் 3,48,934 பேர் பலியாகியுள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

உலகெங்கும் தற்போது 2,35,00,509 பேர் கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகெங்கும் ஆக்டிவ் கேஸ்கள் அதிகமாக உள்ள டாப் 10 நாடுகளில் 7 நாடுகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை. இவை தவிர அமெரிக்கா, இந்தியா, துருக்கி ஆகிய நாடுகளிலும் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

English summary
Worldwide Corona update, European nations are affecting worst.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X