2ஆம் அலை மிக மோசம்... 15 கோடியை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு... உயிரிழப்புகளும் அதிகரிப்பு
டெல்லி: உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 15 கோடியை நெருங்கும் நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் உலகெங்கும் புதிதாக 8,30,647 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
உலகெங்கும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. கடந்த சில வாரங்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகின்றன.

கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் உலகெங்கும் 8,30,647 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.7 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா உயிரிழப்பும் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து உயர்கிறது. நேற்று மட்டும் 13,490 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்பு 31,12,504 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் நிலை என்ன
கொரோனா பரவலின் இரண்டாம் அலை மெல்ல இந்தியாவில் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 3.49 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.69 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா காரணமாக மட்டும் 2,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தியாவில் தற்போது வரை 1.92 லட்சம் பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும், 26 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகில் கொரோனா காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

உலக நாடுகள்
இந்தியாவுக்கு அடுத்து பிரேசிலில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 70,105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல அமெரிக்காவில் 53,280 பேருக்கும் துருக்கி நாட்டில் 40,596 பேருக்கும் பிரான்ஸ் நாட்டில் 32,633 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 3.27 கோடியாக உயர்ந்துள்ளது. பிரேசிலில் இதுவரை 1.43 கோடி பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்பு
பிரேசில் நாட்டில் நேற்று மட்டும் சிகிச்சை பலனிற்றி 2,986 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நேற்று அமெரிக்காவில் 741 பேரும் போலந்தில் 513 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உலகெங்கும் 13,490 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா உயிரிழப்பு 31 லட்சத்தைத் தாண்டியது.

ஆக்டிவ் கேஸ்கள்
உலகெங்கும் தற்போது 1.89 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்காவில் மட்டும் 68 லட்சத்திற்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் 26 லட்சத்திற்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர பிரேசில், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் 10 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் உள்ளனர். தற்போது அதிக கொரோனா நோயாளிகளைக் கொண்ட டாப் 10 நாடுகளில் ஆசியக் கண்டத்தில் இருந்து இந்தியா மட்டும் உள்ளது
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications