100 சதவீதம்.. விரைவில் யோகி ஆதித்யநாத் பிரதமர்.. பாகிஸ்தான் நாடே இருக்காது.. பிரபல ஜோதிடர் கணிப்பு
டெல்லி: ராமர்கோவில் கட்டுவதை சரியாக கணித்து கூறிய பிரபல ஜோதிடர், உத்தர பிரதேச மாநில முதல் அமைச்சராக உள்ள யோகி ஆதித்யநாத் விரைவில் பிரதமராவார் எனவும், 2039க்குள் பாகிஸ்தான் என்ற நாடே இருக்காது எனவும் கணித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள பிரபல ஜோதிடர்களிடம் ஒருவர் அனிருத் குமார் மிஸ்ரா. இவர் அரசியல் சார்ந்து பல்வேறு கணிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதில் ஏராளமான கணிப்புகள் சரியாக நடந்துள்ளன.
அந்த வகையில் ராமர்கோவில் கட்டுவது, 2019 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அவர் கணித்து கூறிய விஷயங்கள் உண்மையானது. தற்போதும் தொடர்ந்து அவர் பல்வேறு கணிப்புகளை வெளிப்படுத்தி வருகிறார்.

யோகி ஆதித்யநாத் பிரதமர் என கணிப்பு
அந்த வகையில் அவர் ஜோதிடர் அனிருத் குமார், நாட்டின் அடுத்த பிரதமர் யார்? என்பது பற்றி கணித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இந்தியாவை சேர்ந்த ஒரு துறவி நீண்டகாலமாக இந்தியாவுக்கு சேவை செய்கிறார். இவரது பதவிக்காலத்தில் இந்தியாவை எதிர்க்க யாருக்கும் தைரியம் இருக்காது'' என கூறியுள்ளார். இந்த பதிவில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் போட்டோவுடன் அவர்பதிவிட்டுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் பிரதமராக யோகி ஆதித்யநாத் ஆவார் என அவர் கணிப்பு வெளியிட்டுள்ளார்.

2வது முறையாக கணிப்பு
நாட்டின் பிரதமராக யோகி ஆதித்யநாத் வருவார் என ஜோதிடர் அனிருத் குமார் கூறுவது இது முதல் முறையல்ல. முன்னதாக கடந்த மாதம் 27ம் தேதி ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில், ‛‛யோகி ஆதித்யநாத் இந்த நாட்டின் பிரதமரான பிறகு இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிறைய மாற்றங்களை காணும். இதன்மூலம் அவர் உலகில் சக்திவாய்ந்த தலைவராக மதிக்கப்படுவார்'' என கூறியிருந்தார்.

கலவையான கருத்துகள்
இந்தியாவின் அடுத்த பிரதமராக யோகி ஆதித்யநாத் வருவார் என தொடர்ந்து சிலர் கூறி வரும் நிலையில் தான் பிரபல ஜோதிடர் அனிருத் குமார் அதனை பிரதிபலிக்கும் வகையில் கணித்து கருத்து தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டர் பதிவுக்கு தற்போது கலவையாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. சிலர் அவரது கணிப்புக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதன்படி நாட்டின் அடுத்த பிரதமர் என்பவர் துறவியாக இருக்கமாட்டார் என சிலர் கூறியுள்ளனர். இன்னும் சிலரோ வேடிக்கையாக துறவி என்றால் அது பாபா ராம்தேவாக இருக்கலாம் என கூறி வருகின்றனர்.

பாகிஸ்தானே இருக்காது
மேலும் காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தானிடம் இந்தியா இழந்த பகுதிகளை இந்தியா 2030ல் மீட்கும் எனவும், 2038-39ம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் எனும் நாடு இருக்காது. அந்த நாடு இந்தியாவின் ஒருபகுதியாக மாறி இருக்கும். பாகிஸ்தான் எல்லைகள் இந்திய எல்லையாக மாறி இருக்கும். ஐஎஸ் தீவிரவாதிகள், பாகிஸ்தான் ராணுவம் என்பது இருக்காது. மேலும் பாகிஸ்தான் பிரதமர் பதவியும் இருக்காது எனவும் அவர் கணித்துள்ளார்.

முந்தைய கணிப்புகள் என்ன?
முன்னதாக இவர் கணித்த பல்வேறு கணிப்புகள் நிஜமாகி உள்ளன. 2017 நவம்பர் 15ல் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்காலத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என கணித்திருந்தார். ராமர் கோவில் கட்டும் பணி தொடங்க இரண்டு ஆண்டுகள் மூன்று மாதங்கள் ஆகும் என்று கூறினார். அப்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் விசாரணையில் இருந்தது. இருப்பினும், அது உண்மையாக மாறியது. மேலும் 2019 நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார் என கூறியிருந்தார். இதுவும் நடந்தது. மேலும் அந்த தேர்தலில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என அனிருத் தெளிவாக கூறினார். இதுவும் பலித்தது.

கைவிட்ட சந்திரயான் கணிப்பு
இருப்பினும் சந்திரயான் விண்வெளி திட்டம் தொடர்பான அவரது கணிப்பு பொய்யானது. சந்திரயான் 2 திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் செப்டம்பர் 20ம் தேதிக்குள் லேண்டர் தகவல் தொடர்பு முறைப்படி கிடைக்கும் என கூறியிருந்தார். ஆனால் லேண்டரின் தொடர்பு என்பது இல்லாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications