டிரைவர் காரை நிறுத்துங்கப்பானு கூறிய ஸ்டாலின்.. இன்ப அதிர்ச்சி அடைந்த ஒகேனக்கல் அரசு பள்ளி மாணவிகள்
தருமபுரி: தருமபுரியில் இருந்து ஓகேனக்கல் புறப்பட்ட முதல்வர் திடீரென பாதி வழியில் காரை நிறுத்தி பள்ளிக்குள் சென்று ஆய்வு செய்தார். முதல்வரை நேரில் பார்த்த மாணவர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.
Recommended Video
சேலம் மாவட்டத்தில் நேற்றைய தினம் வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு காரில் தருமபுரிக்கு முதல்வர் ஸ்டாலின் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது இரவு 8.15 மணிக்கு தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டை காவல் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு செய்தார்.
முதல்வரின் திடீர் வருகையால் காவலர்கள் பூரிப்படைந்தனர். காவல் ஆய்வாளர் இருக்கையில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின் பொது நாட்குறிப்பு, தினசரி பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்த அவர் புகார் மனுக்களையும் கேட்டறிந்தார்.

உதவி
தங்களுக்கு வழங்கப்பட்ட வார விடுமுறை , இடிஆர் குறைப்பு கைவிடப்பட்டிருப்பது ஆகியவை மிகவும் உதவியாக இருப்பதாகவும் அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் முதல்வரிடம் போலீஸார் தெரிவித்தனர். சுமார் 10 நிமிடங்கள் அந்த காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் காவல் நிலைய வளாகத்தில் இருந்த போலீஸாரின் குடும்பத்தினரிடமும் நலம் விசாரித்துவிட்டு கிளம்பினார்.

பள்ளிக் கல்வித் துறை
இந்த சம்பவம் வைரலாகி வருகிறது. ரேஷன் கடை, தடுப்பூசி முகாம்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் ஸ்டாலின் இது போல் திடீர் ஆய்வு மேற்கொள்வது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று காவல் துறையை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் இன்றைய தினம் பள்ளிக் கல்விதுறையில் ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரியிலிருந்து ஒகேனக்கல்
தருமபுரியிலிருந்து ஒகேனக்கல் சென்று கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின் திடீரென தனது காரை நிறுத்துமாறு தெரிவித்தார். பின்னர் அங்கிருந்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியினுள் சென்றார். மாணவிகளை சந்தித்து பேசினார். பள்ளியின் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களிடம் விசாரித்தார். முன்னதாக பள்ளிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் மாணவிகள் கைதட்டி வரவேற்றனர். முதல்வரை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் மாணவிகள் துள்ளி குதித்தனர்.

முதல்வர் ஆய்வு
அண்மைக்காலமாக முதல்வர் மேற்கொள்ளும் திடீர் ஆய்வுகளால் தமிழக அரசின் செயல்பாடுகள் மக்களுக்கு நம்பிக்கையை வரவழைக்கிறது. அரசு இயந்திரம் பொதுமக்களுக்கு உதவாவிட்டால் அது ஒட்டுமொத்த அரசுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும். எனவே இது போல் முதல்வர் அவ்வப்போது திடீர் ஆய்வுகளை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications