தருமபுரி மாணவி வன்புணர்வு.. மேலும் ஒரு குற்றவாளி சரண்.. நீதிமன்றத்தில் ஆஜர்!
தருமபுரியில் 12ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அவளின் மரணத்திற்கு காரணமாக இருந்த இரண்டு இளைஞர்களில் ஒருவன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான்.
Recommended Video

தருமபுரி: தருமபுரியில் 12ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அவளின் மரணத்திற்கு காரணமாக இருந்த இரண்டு இளைஞர்களில் ஒருவன் தற்போது சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளான். இன்னொரு குற்றவாளி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளான்.
தருமபுரி அருகே சிட்லிங் கிராமத்தை சேர்ந்த பிளஸ் டு மாணவி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டார். தீபாவளிக்கு ஊருக்கு வந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த ரமேஷ், சதீஷ் என்ற இளைஞர்கள் பாலியல் வன்புணர்வு செய்து உள்ளனர்.
இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்தான் சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் அந்த சிறுமி பலியானார்.

மோசம்
இந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த ரமேஷ் மற்றும் சதீஷ் என்ற அதே கிராமத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களை போலீசார் தேடி வந்தனர். ஆனால் இவர்கள் மீது பாலியல் வன்புணர்வு வழக்கை பதியாமல், பாலியல் முயற்சி, குற்றம் செய்ய முயற்சி என்று வழக்கு பதிவு செய்து இருந்தனர். அந்த புகாரையும் கூட ஆட்சியர் அலுவலக தலையீட்டிற்கு பின்பே எடுத்தனர்.

ஒருவன் கைது
இந்த குற்றத்தை செய்த ரமேஷ் மற்றும் சதீஷில், சதீஷ் மட்டும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறான். ஒருவாரமாக தலைமறைவாகி இருந்த இவன் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளான். இவனை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

ரமேஷ் சரண்
ஆனால் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரமேஷ் போலீசால் கைது செய்யப்படாமல் இருந்தான். ரமேஷின் தாயார் மது வியாபாரம் செய்கிறார். அவர் போலீசுக்கு நெருக்கம் என்பதால் போலீஸ் அவனை மட்டும் தப்பவிட்டு இருக்கிறது என்று புகார் எழுந்தது. இந்த நிலையில் தற்போது குற்றவாளியான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருக்கிறான்.

மாற்றினார்கள்
இந்த வழக்கை விசாரித்த போலீசார் சரியாக செயல்படவில்லை என்று அந்த ஊர் மக்கள் குற்றச்சாட்டு வைத்து இருந்தனர். இதுகுறித்து அம்மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து தற்போது இந்த வழக்கை விசாரிக்க பெண் போலீஸ் அதிகாரி லட்சுமி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications