பொண்டாட்டியை பார்க்க போன இடத்தில்.. வார்த்தையை விட்ட சிவசங்கர்! தென்னை மரத்தில் தொங்கிய உடல்! ஷாக்
தருமபுரி: தருமபுரி அருகே மனைவியை தன்னுடன் வாழ அனுப்பி வைக்குமாறு கேட்ட மருமகனை அடித்துக் கொன்று, தென்னை மரத்தில் கட்டித் தொங்க விட்ட மாமனார் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், இளைஞரை பலர் சேர்ந்து அடித்துக் கொலை செய்ததாகக் கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரபரப்பாகி கிடக்கிறது தர்மபுரி. மனைவியை தன்னுடன் வாழ அனுப்புமாறு கேட்ட மருமகனை கொலை செய்து இருக்கிறார் மாமனார். பலர் சேர்ந்து அடித்துக் கொன்றதாக குற்றம் சாட்டுகின்றனர் உறவினர்கள். என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தது.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே சில்லரஅள்ளி பகுதியைச் சேர்ந்த சிவசங்கர், கொத்தனார் வேலை செய்து வருகிறார். தற்போது சிவசங்கருக்கு 42 வயதாகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது தனது 22 வயதில் அதே பகுதியைச் சேர்ந்த ரம்யாவை திருமணம் செய்து கொண்டார் சிவசங்கர்.
நாட்கள் செல்ல செல்ல தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் குடும்ப பிரச்சினை எழுந்த நிலையில் மனைவியை பிரிந்த சிவசங்கர், சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே தங்கி கட்டிட வேலை செய்து வந்திருக்கிறார். அடிக்கடி தனது மனைவி ரம்யாவை சந்திக்க வரும் அவர் தன்னுடன் வாழ வருமாறு கேட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சேலத்தில் இருந்து தர்மபுரி வந்த சிவசங்கர் நேராக தனது மனைவியின் வீட்டுக்குச் சென்று தன்னுடன் வாழ வருமாறு அழைத்திருக்கிறார். ஆனால், அதற்கு ரம்யாவின் தந்தையான பச்சையப்பன் சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. என் மனைவியை தானே அழைக்கிறேன்.. உங்கள் வேலையை பாருங்கள் என சிவசங்கர் கூற, பச்சையப்பனுக்கும் அவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.
வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. மருமகனின் செயலால் ஆத்திரம் அடைந்த பச்சையப்பன் வீட்டில் அருகே இருந்த கட்டையை எடுத்து அவரை கொடூரமாக தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சிவசங்கர் சிறிது நேரத்திலேயே துடிதுடித்து மயங்கினார். இருந்த போதும் ஆத்திரம் அடங்காத பச்சையப்பன் சிவசங்கரை கயிற்றில் கட்டி தென்னை மரத்தில் தொங்கவிட்டு இருக்கிறார். சிறிது நேரத்திலேயே சிவசங்கரின் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது மகனை பச்சையப்பன் மற்றும் அவரது மனைவியான கவிதா அடித்து கொலை செய்து விட்டதாக சிவசங்கரன் தந்தை சந்தியப்பன், கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவசங்கரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தர்மபுரி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக பச்சையப்பன் மற்றும் அவரது மனைவி கவிதா ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.
கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் சிவசங்கரின் உறவினர்கள் திடீரென போராட்டத்தில் சிவசங்கரை பச்சையப்பன் மற்றும் அவரது மனைவி மட்டுமல்லாமல் மேலும் சிலரும் சேர்ந்து தான் அடித்து கொலை செய்துள்ளதாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் என காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் இறங்கினர். இதை அடுத்து போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். மனைவியை அழைத்த மருமகனை மாமனாரும் மாமியாரும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications