தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

“பாமகவுக்கு திமுகவோடு கூட்டணி சேர ஆசை..அதனால்தான் ஜி.கே.மணி இப்படி..”- கொளுத்திப்போட்ட வேல்முருகன்!

Google Oneindia Tamil News

தருமபுரி: தி.மு.கவுடன் கூட்டணி சோ்வதற்காக பா.ம.க தலைவர் ஜி.கே.மணி சட்டமன்றத்தில் முதலமைச்சரை புகழ்ந்து தள்ளுகிறார் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார்.

பா.ம.க நிறுவனா் ராமதாஸுக்கு பிறகு அக்கட்சியின் தொண்டர்கள் யார் பின்னால் போகிறாாா்கள் என்பதை காலம் தீா்மானிக்கும் என வேல்முருகன் பேசியுள்ளார்.

தமிழகத்தில் தமிழ் தொியாத வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் தற்போது உயரதிகாரிகளாக பணிபுரிந்து வருகின்றனர் என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பை விட்டுட்டு பெட்ரோல் விலைய குறைங்க! - அமித்ஷாவுக்கு வேல்முருகன் அட்வைஸ் இந்தி திணிப்பை விட்டுட்டு பெட்ரோல் விலைய குறைங்க! - அமித்ஷாவுக்கு வேல்முருகன் அட்வைஸ்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தருமபுரி மாவட்டம் குமாரசாமிப்பேட்டை வள்ளளார் திடலில் தமிழக வாழ்வுாிமை கட்சி சாா்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் இன படுகொலைக்கு ஆளான ஈழ தமிழா்களுக்கு மெழுவர்த்தி ஏந்தி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசுகையில், இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது குறித்தும் இன படுகொலை குறித்தும் தமிழர்கள் பட்ட துன்பங்கள் குறித்தும் பேசினார்.

முதல் குரலாக இருப்பேன்

முதல் குரலாக இருப்பேன்

மேலும் பேசிய அவர், தமிழக சட்டமன்றத்தில் 10.5 சதவித இட ஒதுக்கீட்டுக்காக ஒலிக்கும் முதல் குரலாகவும் தமிழக மக்களின் உரிமைக்காக சட்டமன்றத்தில் ஒங்கி ஒலிக்கும் முதல் குரலாகவும் என் குரல் இருக்கும். மத்திய அரசின் ரயில்வே,வங்கிகள், உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கே பணி வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தியது தமிழக வாழ்வுரிமை கட்சி. சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தமிழக மக்களுக்காக செய்தது தமிழக வாழ்வுரிமைக் கட்சி எனவும் வேல்முருகன் தொிவித்தார்.

ஓட்டுக்காக அரசியல் செய்யவில்லை

ஓட்டுக்காக அரசியல் செய்யவில்லை

ஒட்டுக்காக நான் அரசியல் செய்யவில்லை. சிலர் சின்ன கூட்டத்தை வைத்து பெரிய கூட்டத்தை தகர்த்து எறியவேண்டும் என்று முயற்சிக்கின்றனர். அயுதங்களை நாங்கள் ஏந்தவில்லை அறிவாற்றலை ஏந்தி தமிழ் சமுதாயத்தை உயா்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். தமிழகத்தில் தமிழ் தொியாத வடமாநிலத்தை சேர்ந்த உயரதிகாாிகள் தான் தற்போது தமிழகத்தில் பணிபுரிந்து வருகின்றனர். டம்மியான துறைகள் தமிழர்களுக்கு ஒதுக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

 திமுக கூட்டணியில் இணைவதற்காக

திமுக கூட்டணியில் இணைவதற்காக

தொடர்ந்து, பா.ம.கவை விமர்சித்த வேல்முருகன், தி.மு.கவுடன் கூட்டணி சோ்வதற்காக பா.ம.க தலைவர் ஜி.கே.மணி சட்டமன்றத்தில் முதலமைச்சரை புகழ்ந்து தள்ளுகிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் ராமதாஸுக்கு பிறகு யாருக்குப் பின்னால் செல்வார்கள் என்பதை காலம் தீா்மானிக்கும் எனத் தெரிவித்தார்.

English summary
TVK leader Velmurugan criticized PMK MLA GK Mani about praising Stalin for planning alliance with DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X