Gold Price: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. 3-வது நாளாக குறைந்தது.. சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்?
சென்னை: தங்கம் விலை (Gold Price) தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 அதிரடியாக சரிந்துள்ளது. நேற்று முன் தினம் சென்னையில் ஒரு சவரன் ரூ.1,17,840-க்கு விற்பனை ஆன நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. திடீரென ஏறுவதும் பின்னர் சரிவதுமாக தங்கம் விலை இருந்து வருகிறது. எனினும் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலையானது சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை ஆகின்றது.

குறைந்து வரும் தங்கம் விலை
அதிலும் கடந்த 12 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 1.14 லட்சத்துக்கு விற்பனை ஆன நிலையில் திடீரென ஷாக் கொடுக்கும் விதமாக ஒரே நாளில் ரூ.9 ஆயிரம் அதிகரித்து ரூ. 1.23 லட்சத்திற்கு நகை பிரியர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. அதுவரை லேசான ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை அன்று ஒரே நாளில் உச்சம் தொட்டது.
ஆனால் அதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை குறைந்து வந்தது. அதன்படி நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு 400 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.14,730-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றும் அதிரடியாக குறைந்தது
தொடர்ந்து நேற்றும் இரண்டாவது நாளாக தங்கம் விலை குறைந்தது. நேற்று ஒரே நாளில் ஆபரணத் தங்கம் ரூ. 640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.80 குறைந்து ரூ.14,650-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று வெள்ளி விலையும் நேற்றும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.290-க்கு விற்பனை ஆனது.
இந்த நிலையில் இன்றும் 3வது நாளாக தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,200 குறைந்து ரூ.1,16,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.150 குறைந்து ரூ.14,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை நேற்றைப் போலவே இன்றும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.285-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தினம் சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்தது. ஒரு அவுன்ஸ் (28 கிராம்) $55 குறைந்து $4,446-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
தங்கம் விலை நிலவரம்:
28-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000 (இன்று)
27-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
26-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
25-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
24-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
23-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
22-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
21-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,480
20-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
19-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,960
18-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
17-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
16-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
15-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,120
14-05-2026 - ஒரு சவரன் ரூ.1,20,400
13-05-2026 ஒரு சவரன் ரூ.1,23,200
12-05-2026 ஒரு சவரன் ரூ. 1,14,640
11-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
10-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
09-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
08-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
07-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
06-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
05-05-2026- ஒரு சவரன் ரூ.1,10,560
04-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,000
-
கோடம்பாக்கத்தில் காதல் பிரச்சனை.. ரொக்க பரிசு... இறுதியாக இரண்டு பேர் போன இடம் புழல் சிறை -
கோவை குப்பைக்குள் மின்னிய 3 சவரன்.. அப்படியே ஒப்படைத்த தங்கம்! தூய்மை பணியாளருக்கு குவியும் பாராட்டு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!













Click it and Unblock the Notifications