கோடைக்காலமே வரல.. அதற்குள் வறண்டு போன ஒகேனக்கல்.. சுற்றுலாப் பயணிகள், விவசாயிகள் அதிர்ச்சி
தர்மபுரி: கோடைக்கு முன்பே வறண்டு போன ஒகேனக்கல்லால் அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையும் அடியோடு சரிந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஒகேனக்கல் வறண்டு காணப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகள், காவிரி ஆற்றில் நீர் வரத்து இருந்து வந்தது. ஆனால், தற்போது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நீரின்றி வறண்டு காணப்படுகிறது.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு கர்நாடக மாநிலம் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு வழியாக வருகிறது. பருவமழை காலத்தின் போதும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்போதும் அதிகபட்சமாக 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வரும்.

களைகட்டும் ஒகேனக்கல்
அப்போது ஒகேனக்கல் களை கட்டும்.. காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதை காண தமிழகம் மட்டும் இன்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள்.
மேலும் இங்குள்ள தொங்கு பாலம், நடைபாதை, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசிப்பர். இங்கு பரிசல் வசதியும் உண்டு என்பதால் குடும்பங்களோடு, நண்பர்களோடு வரும் சுற்றுலாப் பயணிகள் பரிசல் சென்று மகிழ்வார்கள். சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகம் வருவதால் அங்கு சிற்றுண்டி கடை வியாபாரிகளுக்கும் வியாபாரம் களை கட்டும்.
வறண்டு காணப்படுகிறது
இந்த நிலையில் பருவமழை குறைந்ததும், நீர் வரத்து இல்லாததாலும் ஆர்ப்பரித்து காணப்பட்டு வந்த ஒகேனக்கல் தற்போது களையிழந்து வறண்டு காணப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அப்பகுதி வறண்டு காணப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகள், காவிரி ஆற்றில் நீர் வரத்து இருந்து வந்தது. ஆனால், தற்போது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நீரின்றி வறண்டு காணப்படுகிறது.
காவிரி ஆற்றில் சிறு ஓடை போல் தண்ணீர் செல்கிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.பார்க்கும் இடமெல்லம் வெறும் பாறைகளாகவே காட்சியளிக்கிறது. கோடை விடுமுறைக்கு முன்பாகவே தற்போதே பாறை திட்டுக்களாக காட்சியளிப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
தமிழகம் மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மட்டுமே நீர்வரத்து அதிகரிக்கும். ஆனால் மழை எதுவும் பெய்யாததாலும், நீர் வரத்து குறைந்ததாலும் தற்போது பாறை திட்டுகளாக காட்சியளிப்பதால், அங்கு வந்த சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றம் அடைந்தனர். ஐவரி பாணி, சினி பால்ஸ், தொங்கு பால்ஸ் உள்ளிட்டவைகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது.
தற்போது கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வரத்தும் குறைந்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளை நம்பியுள்ள கடை வியாபாரிகள், பரிசல் ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்துள்ளதால் விவசாயிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோடைக்காலம் மார்ச் முதல் தொடங்கும். ஆனால் மார்ச் மாதத்திற்கு இன்னும் 10 நாட்களுக்கு மேல் இருந்த போதிலும் தற்போதே தண்ணீர் இன்றி வறண்டு போனது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications