அதே இடம்.. அச்சுறுத்தும் தொப்பூர் ‘மரணப்பாதை”.. காண்போரை கதி கலங்கச் செய்யும் சிசிடிவி காட்சி!
தருமபுரி: தொப்பூர் கணவாய் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்து சிசிடிவி காட்சி, காண்போரை கதிகலங்க வைத்துள்ளது. இதே இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல பல வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாகவே அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று (ஜனவரி 24) தொப்பூர் கணவாய் பகுதியில் உள்ள இரட்டை பாலம் பகுதியில் இரண்டு கார்களும் மூன்று லாரியும் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற வாகனங்களில் மோதியது. இதில் மற்றொரு லாரி பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள் மற்றும் கார்கள் மீது மோதியது. இதனால் அங்கு கோர விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு லாரி நிலை தடுமாறி பாலத்தில் இருந்து மொத்தமாக கீழே விழுந்து நொறுங்கியது. லாரிக்கு இடையே சிக்கி கார் நசுங்கியது. இதில் கார்கள் மற்றும் ஒரு லாரி தீப்பிடித்து எரிந்தன.
இந்தக் கோர விபத்தில், காரில் பயணம் செய்த மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கோரச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
தருமபுரி நெடுஞ்சாலை தொப்பூர் கனவாயில் பயங்கர விபத்து.. தலைகுப்புற கவிழ்ந்து கணவாயில் விழுந்த லாரி.. பதறவைக்கும் பகீர் வீடியோ#Thoppur #LorryAccident #CCTV #RoadAccident #NewsTamil24x7 pic.twitter.com/8w56f1dKDQ
— Kumaresan Pmk (@KUMARESAN_PMK_) January 24, 2024
இந்த சம்பவம் தொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில், அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
தொப்பூர் கணவாய் நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக லாரிகள், கண்டெய்னர்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றன. இந்த நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் மலைப்பாதை பகுதி சுமார் 6 கி.மீ தொலைவுக்கு அமைந்துள்ளது.
நீண்ட தூரத்தில் இருந்து அதிக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 1000 விபத்துகள் இப்பகுதியில் நடந்துள்ளன. தமழிகத்தில் அதிக விபத்துகள் நடக்கும் பகுதியாக தொப்பூர் கணவாய் பகுதி உள்ளது.
இதே இடத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 12 வாகனங்கள் அடுத்தடுத்து சங்கிலித் தொடர் போல மோதி விபத்துக்குள்ளானதில், பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதியில் விபத்துகளை தவிர்க்க Elevated highway அமைக்கப்பட உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications