நீட் தேர்வு.. ஜோதி ஸ்ரீயை தொடர்ந்து மேலும் ஒரு மாணவர் மரணம்.. தருமபுரியை சேர்ந்த ஆதித்யா தற்கொலை!

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: நீட் தேர்வு அச்சம் காரணமாக தருமபுரியை சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நீட் தேர்வு எழுத தயாராகி வந்த மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா, தேர்வு அச்சம் காரணமாக இன்று தற்கொலை செய்து கொண்டார். உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் இவர் பதிவு செய்த ஆடியோவும் வெளியாகி உள்ளது.

Neet Fear: One more student named Aaditya commits suicide in Tamilnadu

இன்று காலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தை இந்த தற்கொலை சம்பவம் உலுக்கி உள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு அச்சம் காரணமாக தருமபுரியை சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆதித்யா கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வருகிறது. நாளை தேர்வு நடக்க உள்ள நிலையில் இன்று இவர் தற்கொலை செய்து கொண்டார்.

இன்று ஒரே நாளில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் கடந்த வாரம் அரியலூர் மாணவன் விக்னேஷ் என்பவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தவர்.

தமிழகத்தில் ஒரே வாரத்தில் மூன்று பேர் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+