குடிக்க தண்ணி கேட்டா கழிப்பறை பக்கத்துல இருக்குற டேங்க்ல பிடிக்க சொல்றாங்க.. மலை கிராம மக்கள் புகார்
தருமபுரி: மலைவாழ் இருளர் இன மக்களை, கழிப்பறை அருகே இருக்கும் சின்டெக்ஸ் டேங்கில் வரும் தண்ணீரை குடிக்க உபயோகித்து கொள்ளுமாறு ஊராட்சி மன்ற தலைவரும், செயலாளரும் கூறியதாக புகார் எழுந்துள்ளது.
மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவையாக இருப்பது குடிநீர். மனித நாகரிகம் எவ்வளவோ முன்னேற்றங்களைக் கண்டிருக்கும் நிலையிலும் ஒருபகுதி மக்கள் இன்னும் குடிநீருக்கே தவிக்கும் நிலை உள்ளது. அதிலும், குடிநீர் வழங்குவதில் சமூக ரீதியில் பாகுபாடு காட்டப்படும் சூழலும் இருக்கிறது.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வேடகட்டமடுவு ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டியூர் பகுதியில் மலைவாழ் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆறு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காததால் பள்ளி மாணவ மாணவிகள், வேலைக்குச் செல்பவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பஞ்சாயத்து தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் ஆண்டியூர் மலைவாழ் மக்கள் கோபத்துடன் இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுத்து தண்ணீர் வழங்கப்படும் என தெரிவித்ததன் பேரில் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
இது குறித்து மலைவாழ் கிராம தெரிவிக்கையில், தங்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் குடிநீர் வழங்கப்படுவதில்லை என்றும், இதுகுறித்து கேட்டதற்கு, பொதுக் கழிவறை கட்டிடடத்தை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள சின்டெக்ஸ் டேங்கில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும், அங்கே சென்று தண்ணீரை பிடித்து கொள்ளும்படி ஊராட்சி மன்ற செயலாளர், பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் தெரிவித்ததாக கூறுகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், நாங்களும் மனிதர்கள் தானே, எங்களுக்கென நிதி ஒதுக்கீடு செய்து நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தராமல், கழிப்பறை அருகே உள்ள சின்டெக்ஸ் டேங்கில் இருந்து தண்ணீரை பிடித்த்துக் கொள்ளச் சொல்வதா என கேள்வி எழுப்பியுள்ளனர். மலை கிராம மக்கள் பயன்பெரும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தங்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications